முக்கியமான மாற்றமாக, பிஎன்ஜி (Piped Natural Gas) இணைப்பு பெற்ற வீடுகளுக்கான எல்பிஜி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, பிஎன்ஜி வசதி செயல்பாட்டுக்கு வரும் 30 நாட்களுக்குள் பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதேசமயம், இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் நிறுவனங்கள் ‘கனெக்ஷன் டிரான்ஸ்ஃபர் வவுச்சர்’ முறையை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் மீண்டும் எல்பிஜி இணைப்பு பெறும் வாய்ப்பையும் வழங்குகின்றன. வழக்கம்போல், எல்பிஜி மற்றும் வணிக சிலிண்டர் விலை திருத்தமும் இன்று அமலுக்கு வருகிறது.