சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்து கிராமுக்கு ரூ.9160 ஆகவும், சவரனுக்கு ரூ.73,280 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்து கிராமுக்கு ரூ.126 ஆக உள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதிக்கின்றனர்.
25
நிரம்பி வழியும் நகை கடைகள்!
தங்கம் விலை குறைந்ததால் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளவர்கள் நகைக்கடையில் குவிந்துள்ளனர். இதனால் நகை கடைகள் எல்லாம் பெண்களால் நிரம்பி வழிகிறது.
35
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ.9160 விலையில் விற்பனையாகிறது. சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1 சவரன் 73,280 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 126 ரூபாயாக உள்ளது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் செய்துள்ள முதலீடுகளை வெளியே எடுத்ததே விலை சரிவடைய காரணம் என தங்கம் நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
55
விலை வீழ்ச்சியை பயன்படுத்தி கொள்ளவும்
வரும் வாரத்தில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ள போதிலும், இன்றைய விலை சரிவை பயன்படுத்திகொள்ளலாம் என்றும் காத்திருக்க தேவையில்லை என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.