வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு கட்டணம் (AMB) ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி ஜீரோ இருப்புடன் கணக்குகளை தொடரலாம்.
காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகிறார்கள். அந்த வகையில் வங்கியில் பணத்தை சேமித்து வைக்க புதிய கணக்கை தொடங்கினால் பாதுகாப்பாக பணம் இருக்கும் என பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுறை கூறப்படுகிறது. இதனை நம்பி மக்களும் வங்கி கணக்கை தொடங்குவார்கள். அத்தியாவசிய தேவைக்கு அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டால் அவ்வளவு தான். வங்கியானது அபராதம் போடும், இதனால் பெரும்பாலானவர்களின் வங்கி கணக்குள் மைனஸ் தொகைக்கு சென்று விடும்.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவது பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கின்றனர், ஆனால் அனைத்திலும் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க முடியாது. இதனால், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது, இது மக்களுக்கு கூடுதல் நிதி சுமையாக மாறியுள்ளது.
24
ரூ. 2,331 கோடி அபராதமாக வசூல்
குறைந்தபட்ச இருப்பு இல்லாத கணக்குகளுக்கு அபராதமாக வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ரூ. 2,331 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 25% அதிகம். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.
இது மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று ஆர்பிஐ உத்தரவிட்டாலும், சில வங்கிகள் இதை பின்பற்றாமல், கணக்கை மூடுவதற்கு முன் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
34
இந்தியன் வங்கி நிகர லாபம் 2973 கோடி
இந்த நிலையில் மக்கள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் வங்கி குட் நியூஸ் சொல்லியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான காலாண்டு ஜூன் 30 நிறைவடைந்ததையடுத்து இந்த காலாண்டில் இந்தியன் வங்கி மேற்கொண்ட சாதனைகளை குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் பினோத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்தியன் வங்கி கடந்த கால ஆண்டில் நிகர லாபம் 2973 கோடியாக ரூபாய் இருக்கிறது.
கடந்த ஆண்டு விட ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு கால ஆண்டு நிகர லாபம் என்பது 23.69 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.நிகர வட்டி வருவாய் இந்த காலாண்டில் 6,359 கோடியாக ரூபாய் இருக்கிறது. கடந்த ஆண்டு காலண்டோடு ஒப்பிடும்பொழுது இது 2.93 சதவீதம் உயர்ந்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் விவசாயம் சிறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கடந்த காலாண்டில் 363221 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். Upi பயன்படுத்துவர் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாகவும் 2.29 கோடி பயனாளர்கள் இருப்பதாகவும் , அதேபோன்று நெட் பேங்கிங் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மட்டும் இந்தியன் வங்கியின் 1098 கிளைகள் இருப்பதாகவும் இந்தியாவில் இங்கதான் அதிகமாக இருப்பதாகும் அதாவது 19.1% கிளைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் அக்கவுண்ட் மெயின்டனன்ஸ் அபராதம் வசூலிப்பு முறை நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் ஜீரோ நிலையில் வங்கி கணக்கை தொடரலாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.