புது லேப்டாப் வாங்க ரூ.13,000 போதும்! தீபாவளி ஆஃபரை மிஸ் பண்ணாதிங்க!

First Published | Oct 12, 2024, 2:06 PM IST

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய ஜியோபுக் 11 லேப்டாப் தற்போது விலை குறைந்துள்ளது. இந்த லேப்டாப் இப்போது, ரூ.13 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

JioBook 11 laptop

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு ஜியோபுக் 11 லேப்டாப்பை மலிவு விலையில் வழங்குகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த லேப்டாப் மிகப் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பின் புதிய விலை ரூ.13,000க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த லேப்டாப் குறைந்த பட்ஜெட்டைக் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் அல்லது அமேசான் மூலம் வாங்கலாம்.

JioBook 11 Diwali offer

JioBook 11 என்பது ஆண்ட்ராய்டு 4G லேப்டாப் ஆகும். இதில் பல அப்ளிகேஷன்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இது தவிர, JioBook 11 ஆஃபீஸ் தொகுப்பை முற்றிலும் இலவசமாகக் உள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த லேப்டாப் JioOS இல் வேலை செய்கிறது. MediaTek 8788 CPU செப்செட் இருக்கிறது. 4G மொபைல் நெட்வொர்க் இணைப்புடன் WiFi இணைப்பு ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

JioBook 11 battery life

JioBook 11 பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 8 மணிநேர முழு தாக்குப்பிடிக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது. இது தவிர, பேட்டரிக்கு 12 மாத உத்தரவாதம் தருகிறார்கள். பெரிய 11.6-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த லேப்டாப், சுமார் ஒரு கிலோ (990 கிராம்) மட்டுமே எடை கொண்டது. இந்த லேப்டாப் நீல நிறத்தில் மட்டும்தான் கிடைக்கிறது.

JioBook 11 Specs

ஜியோ புக் 11 லேப்டாப்பில் 64GB ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 4GB RAM கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய டச்பேட் மற்றும் கீபேட் கொண்டுள்ளது. இதனால், டைப் செய்வது எழுதுவது எளிதாக இருக்கும்.

JioBook 11 Usage

இந்த ஜியோ புக் 11 லேப்டாப் அடிப்படையான பயன்பாடுகளுக்கு மட்டுமே ஏற்றது. ஹெவி சாப்ட்வேர்களை இதில் இயக்க முடியாது. ஆன்லைன் படிப்பில் கலந்துகொள்வதற்கும் இதை பயன்படுத்தலாம்.

JioBook 11 Price cut

JioBook 11 கடந்த ஆண்டு இந்திய சந்தையில் ரூ.16,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய விலைக் குறைப்புக்குப் பிறகு, இதன் விலை ரூ.12,890 ஆகக் உள்ளது. QuickHeal Parental Control சப்ஸ்கிரிப்ஷன், DigiBoxx வழங்கும் 100GB கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவை இந்த லேப்டாப்புடன் இலவசமாகக் கிடைக்கின்றன.

Latest Videos

click me!