ஐடிஆர் தாக்கல் காலக்கெடு அக்டோபர் 30 வரை நீட்டிப்பு? 5 முக்கிய காரணங்கள்

Published : Aug 20, 2025, 10:10 AM IST

2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 15, 2025. பல்வேறு சிரமங்களை காரணம் காட்டி, வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்கள் காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

PREV
15
வருமான வரி ரிட்டர்ன்

2024–25 நிதியாண்டிற்கான வருமான வரி (ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதி தற்போது செப்டம்பர் 15, 2025 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக மட்டுமே உள்ளதால், வரி செலுத்துவோர் மற்றும் கணக்காய்வாளர்களிடம் கவலை அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசிடம் மீண்டும் கடைசி தேதியை நீட்டிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

25
ஐடிஆர் தாக்கல் காலக்கெடு

குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (GCCI) உட்பட பல வரி நிபுணர்கள், சிஏக்கள், வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT)-க்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் கூறுவதாவது, தற்போதைய சூழ்நிலையில், வரி செலுத்துவோரும், வரி நிபுணர்களும் காலக்கெடுவுக்குள் ITR தாக்கல் செய்வது சாத்தியமில்லை.

35
ஐடிஆர் படிவங்கள்

காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள்:

* ஐடிஆர் படிவங்களும், சாப்ட்வேர் உபயோக வசதிகளும் தாமதமாக வெளியிடப்பட்டது.

* ஆன்லைன் போர்டலில் அடிக்கடி ஏற்படும் லாகின் பிழைகள், டைம்-அவுட் பிரச்சினைகள்.

* படிவம் 26AS, AIS, TIS-ல் தவறுகள் மற்றும் தரவு புதுப்பிப்பு தாமதம்.

* புதிய நிதி விபர வடிவம் அறிமுகமானதால் செயல்முறை நீளமாகியுள்ளது.

* ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை வரும் பண்டிகைகள் காரணமாக தாக்கல் செயல்முறை மந்தமாகும்.

இந்த சிக்கல்களை முன்னிட்டு, GCCI நிறுவனம் ஆடிட்டுக்கு உட்படாத வழக்குகளில் கடைசி தேதியை அக்டோபர் 30, 2025 வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

45
வரி நிபுணர்கள்

வரி நிபுணர்கள் கூறுவதாவது, ITR அப்லோட் செய்யும் போது போர்டல் அடிக்கடி பிழை காட்டுகிறது. பல நேரங்களில் தரவு அப்டேட் ஆகாமல் போகிறது. இதனால் தாக்கல் செய்கையில் சிரமம் ஏற்படுகிறது. பலர் சமர்ப்பித்த பிறகும் பிழை தகவல் வந்துவிடுகிறது. இந்நிலையால், காலக்கெடு குறுகியதாக இருந்தால், பலரும் தாக்கல் செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

55
கடைசி தேதி

ஏற்கனவே இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி இருந்த கடைசி நாள், மே மாதத்தில் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 15-ஆக மாற்றப்பட்டது. அந்த நேரத்தில், புதிய படிவங்கள் மற்றும் விதிகள் அறிமுகமானதால், மக்கள் தாக்கல் செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என்று அரசு தெரிவித்தது. தற்போது GCCI மற்றும் பல வரி நிபுணர்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசாங்கம் இந்த கடைசி தேதியை மீண்டும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு உள்ளது கருதப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories