IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!

Published : Jul 16, 2026, 11:12 AM IST

IRCTC New Beta Website: இந்திய ரயில்வே IRCTC-யின் புதிய பீட்டா வெப்சைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் மிக ஈஸியாக ரயில் டிக்கெட் புக் செய்யலாம். சோதனை ஓட்டம் நடைபெறும் புதிய பீட்டா வெப்சைட் குறித்து பார்ப்போம்.

PREV
14
IRCTC New Beta Website - IRCTC-யின் புதிய பீட்டா வெப்சைட்

இந்தியாவில் ஏழைகளின் ரதமாக ரயில் போக்குவரத்து உள்ளது. குறைந்த கட்டணத்தில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஐஆர்சிடிசி ஆப் அல்லது வெப்சைட் மற்றும் ரயில் ஒன் ஆப் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதில் ஐஆர்சிடிசியில் டிக்கெட் புக் செய்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்த நிலையில், ஜூலை 15 முதல், இந்திய ரயில்வே IRCTC-யின் புதிய பீட்டா வெப்சைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் அனுபவத்தை இன்னும் எளிதாக்குகிறது. இந்த புதிய வெர்ஷனில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்று பார்ப்போம்.

24
இனி மிக எளிதாக டிக்கெட் புக் செய்யலாம்

IRCTC-யின் புதிய பீட்டா வெப்சைட் அறிமுகமாகியுள்ளது. தற்போது இது சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. பயணிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. IRCTC தளம் 2002-ல் தொடங்கப்பட்டது. பெரும்பாலான ரயில் டிக்கெட்கள் இதன் மூலம்தான் புக் செய்யப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 14.5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் இந்த வெப்சைட் மூலம் புக் ஆகின்றன.

புதிய வெப்சைட் மிக எளிமையான வடிவமைப்புடன் வந்துள்ளது. தேவையில்லாத பாப்-அப்கள், கண்களைப் பறிக்கும் கிராபிக்ஸ் அல்லது கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் எதுவும் இதில் இருக்காது.புதிய வெர்ஷனில் கேப்ட்சா தொடர்பான சிக்கல்கள் இருக்காது. முன்பெல்லாம் டிக்கெட் புக் செய்யும்போது கேப்ட்சாவை என்டர் செய்ய வேண்டும். இனி அந்த வேலை இல்லை. இதனால் வேகமாக டிக்கெட் புக் செய்யலாம்.

34
புதிய வெப்சைட் எப்படி செல்வது?

முன்பெல்லாம் டிக்கெட் புக் செய்யும்போது ஒவ்வொரு முறையும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. இனி அந்த அவசியம் இல்லை. ஒருமுறை உங்கள் விவரங்களைக் கொடுத்தால் போதுமானது. செக்-அவுட் செயல்முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்பு டிக்கெட் புக் செய்ய பல படிகளைக் கடக்க வேண்டியிருந்தது, நிறைய ஸ்க்ரோல் செய்ய வேண்டியிருந்தது. புதிய வெப்சைட்டில் இந்த படிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய பீட்டா வெப்சைட் தற்போதைய பிரதான தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே "Try New Beta Version" என்ற லிங்க் மூலம் கிடைக்கிறது. பயணிகள் தங்களின் பழைய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தியே இதிலும் நுழையலாம். புதிய கணக்கு தொடங்கத் தேவையில்லை.

44
முதன்மை வெப்சைட்டாக எப்போது மாறும்?

மேலும், இதில் 'புக்கிங் ஹிஸ்டரி' (Booking History) மற்றும் ரிஃபண்ட் நிலவரங்களை ஒரே கிளிக்கில் பார்க்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில் தேடலின் போது, குறிப்பிட்ட தேதியில் டிக்கெட் இல்லை எனில், அதற்கு அடுத்தடுத்த தேதிகளில் உள்ள டிக்கெட் நிலவரங்களை (Alternative Dates Availability) தளம் தானாகவே காட்டும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் முடிந்து, பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் இதில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்டு, விரைவில் இதுவே முதன்மை வெப்சைட்டாக மாற்றப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories