IRCTC Divya Dakshin Yatra: IRCTC ஒரு சூப்பரான தென்னிந்திய சுற்றுலா பேக்கேஜை அறிவித்துள்ளது. வெறும் ₹15,600 ஆரம்ப விலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை உட்பட 7 முக்கிய இடங்களுக்குப் பயணிக்கலாம். இந்த ரயில் பயணத்தின் முழு விவரங்கள் இதோ.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களைப் பார்க்க ஆசையா? ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்கரைகள், கோயில்களை ஒரு ரவுண்ட் அடிக்கணுமா? அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ். IRCTC 'திவ்ய தக்ஷின் யாத்ரா வித் அருணாச்சலம்' என்ற சூப்பர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் பயணத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியாவின் முக்கிய புண்ணிய தலங்களுக்குப் போகலாம். 8 இரவுகள், 9 பகல்கள் கொண்ட இந்த பயணத்தில் 2AC, 3AC மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்கள் உள்ளன.
இந்த சிறப்பு சுற்றுலாப் பயணம் மொத்தம் 8 இரவுகள், 9 பகல்கள் கொண்டது. பயணம் வரும் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்றுலா ரயிலில் மொத்தம் 702 இருக்கைகள் உள்ளன. இதில் 160 ஸ்லீப்பர் கிளாஸ், 3AC-490, 2AC-52 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
9 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில், தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான 7 ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வார்கள். ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த பயணத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய முக்கிய இடங்கள் அடங்கும்.
இந்தப் பயணத்தில் பக்தர்கள் தென்னிந்தியாவின் பல புகழ்பெற்ற கோயில்களை தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில், திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இவற்றுடன், தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், கன்னியாகுமரியில் உள்ள ராக் மெமோரியல் மற்றும் குமரி அம்மன் கோயிலையும் பார்க்கலாம்.
இந்த IRCTC டூர் பேக்கேஜை புக் செய்பவர்களுக்கு பயணத்தின்போது எந்த சிரமமும் இருக்காது. பயணிகளுக்கு தினமும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். இதுமட்டுமின்றி, அனைத்து பயணிகளுக்கும் பயணக் காப்பீடும் (Travel Insurance) இந்த பேக்கேஜில் அடங்கும். பயணம் முழுவதும் பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் தொழில்முறை சுற்றுலா வழிகாட்டிகள் (Professional Tour Escorts) உடன் இருப்பார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.