ரூ.5 லட்சம் முதலீட்டை ரூ.15 லட்சமாக மாற்றும் தபால் துறையின் ஜாக்பாட் ஸ்கீம்

First Published | Jul 26, 2024, 6:16 PM IST

ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் சேமிப்பை எந்தவித ஆபாயமும் இல்லாமல் அதிகரிக்க விரும்புகிறார்கள். மேலும் நல்ல வருமானத்துடன் வரிச் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள்.

தபால் துறையில் சேமிப்பு

ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் சேமிப்பை எந்தவித ஆபாயமும் இல்லாமல் அதிகரிக்க விரும்புகிறார்கள். மேலும் நல்ல வருமானத்துடன் வரிச் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள். பல்வேறு அஞ்சல் அலுவலக முதலீட்டுத் திட்டங்களுக்கு பிரிவு 80C மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகள் உள்ளன.

சேமிப்பு திட்டம்

அந்த வகையில் இந்த தொகுப்பில், நல்ல வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.

Latest Videos


வரிச்சலுகை

வைப்பு நிதி திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் வங்கிகளை விட சிறந்த வட்டியைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் விரும்பினால், மூன்று மடங்குக்கு மேல், அதாவது ரூ.5,00,000 முதலீடு செய்தால், ரூ.15,00,000-க்கு மேல் சம்பாதிக்கலாம். 

தபால் துறை

உங்கள் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலகம் 5 வருட லாக்-இன் மீது 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

முதலீடு

தற்போதைய வட்டி விகிதத்தின்படி, முதிர்வுத் தொகையாக ரூ.7,24,974 கிடைக்கும். இந்தப் பணத்தை எடுக்க வேண்டாம், இன்னும் ஐந்து வருடங்களுக்கு உங்கள் கணக்கிலேயே வைத்துக் கொள்ளவும்.

வைப்பு நிதி

இதன் மூலம், 10 ஆண்டுகளில் வட்டியாக ரூ.5,51,175 கிடைக்கும். மொத்தத் தொகை ரூ.10,51,175 ஆக இருக்கும். 15 லட்சமாக மாற்ற, உங்கள் பணத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். இந்த வழியில், நீங்கள் ஒரே திட்டத்தின் கீழ் இரண்டு முறை மீண்டும் முதலீடு செய்தால் உங்கள் வட்டி ரூ.10,24,149 ஆக இருக்கும். உங்களின் மொத்த வருமானம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

click me!