NPS Vatsalya: குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் சேருங்க! எதிர்காலம் பிரகாசமா இருக்கும்!!

Published : Nov 30, 2024, 03:32 PM IST

NPS வாத்சல்யா திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டமாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கணக்கு தொடங்கலாம். முதிர்வுக்குப் பிறகு பகுதி திரும்பப் பெறலாம்.

PREV
19
NPS Vatsalya: குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் சேருங்க! எதிர்காலம் பிரகாசமா இருக்கும்!!
NPS Vatsalya Yojana

உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும்போது NPS வாத்சல்யா கணக்கை வழக்கமான NPS கணக்காக மாற்றலாம். குழந்தைக்கு 18 வயதாகும் முன்பே வாத்சல்யா கணக்கிலிருந்து குறிப்பிட்ட அளவு பணம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

29
NPS Vatsalya Yojana

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

39
NPS Vatsalya Yojana

தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, வாத்சல்யா திட்டமும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளது.

49
NPS Vatsalya Yojana

குழந்தைக்கு 18 வயதாகும்போது, ​​வாத்சல்யா கணக்கை வழக்கமான என்பிஎஸ் கணக்காக மாற்றலாம். அல்லது இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால், வருடாந்திரத் திட்டத்தை வாங்க, குறைந்தபட்சம் 80% முதிர்வுத் தொகையை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். 20% தொகையை மட்டுமே மொத்தமாகத் திரும்பப் பெற முடியும்.

59
NPS Vatsalya Yojana

என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில், பெற்றோர் ஆண்டுக்கு குறைந்தது ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். இதில் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.  நீங்கள் NPS வாத்சல்யா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், மேலும் உங்கள் குழந்தை 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

69
NPS Vatsalya Yojana

NPS வாத்சல்யா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யவது எதிர்காலத்தில் பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகை அவர்களின் குழந்தையின் உயர் கல்விக்காகவோ அல்லது தொழில் தொடங்குவதற்கோ பயன்படுத்தப்படலாம்.

79
NPS Vatsalya Yojana

உங்கள் பிள்ளைக்கு 18 வயது ஆவதற்குள் NPS வாத்சல்யா கணக்கிலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தைப் பெறலாம். பதிவுசெய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த டெபாசிட் தொகையில் 25% வரை திரும்பப் பெறலாம். இவ்வாறு மூன்று முறை பணம் எடுக்கும் வசதி உண்டு. PFRDA வழிகாட்டுதல்களின்படி, இந்தத் தொகையை கல்வி, மருத்துவ சிகிச்சை போன்ற அவசியத் தேவைகள் ஏற்படும்போதுதான் திரும்பப் பெறலாம்.

89
NPS Vatsalya Yojana

இந்தத் திட்டத்தில் உங்கள் குழந்தைக்காக பிறந்தது முதல் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 18 ஆண்டுகளில் ஆண்டு வருமானம் சுமார் 12.86% (என்.பி.எஸ். திட்டத்தில் சராசரி வட்டி விகிதம்) இருக்கும். மொத்த முதலீட்டுத் தொகை, ரூ. 2,16,000. இதற்கான வட்டி ரூ. 6,32,718. எனவே குழந்தையின் 18 வயதில் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகை சுமார் 8,48,000 ரூபாய்.

99
NPS Vatsalya Yojana

NPS வாத்சல்யா விதிகளின்படி, முதிர்வுத் தொகையில் 80%, அதாவது ரூ. 6,78,400, கட்டாயமாக வருடாந்திர திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யப்பட வேண்டும். 20%, அதாவது ரூ. 1,69,600 மட்டுமே மொத்தமாக எடுத்துகொள்ள முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories