Insurance Claim : உங்கள் காப்பீடு ரிஜெக்ட் செய்யப்படலாம் தெரியுமா? இந்த 5 தவறுகளை கட்டாயம் தவிர்க்கணும்!

First Published | Oct 7, 2024, 6:42 PM IST

Insurance Claim : இன்றைய காலகட்டத்தில் உடல்நலக் காப்பீடு மிகவும் முக்கியமானது. ஆனால் நீங்கள் உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

Insurance Claim

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மருத்துவம் சார்ந்த அவசர நிலைகளை கையாள இவை நிச்சயம் தேவைப்படும். நம்மில் பலர், பல சமயங்களில் காப்பீட்டு பாலிசி எடுக்கின்றோம். ஆனால் அதற்கான க்ளைம் செய்யும் போது, ​​க்ளைம் நிராகரிக்கப்படலாம் என்று உங்களுக்கு தெரியுமா?. ஆம், Claim தாக்கல் செய்யும் போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கோரிக்கை இந்த 5 காரணங்களுக்காக நிராகரிக்கப்படலாம். இது குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தவறான தகவல்களை எப்போதுமே வழங்க வேண்டாம்

பல சமயங்களில், இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, ​​வயது, வருமானம், தொழில் போன்றவற்றைப் பற்றி மக்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தவறான தகவலை வழங்குகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் தான், பல நேரங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடல்நலக் காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்கின்றன. எனவே, உடல்நலக் காப்பீட்டைப் பெறும்போது, ​​உங்கள் வயது, வருமானம் பற்றிய சரியான மற்றும் உண்மையான தகவல்களைத் தருவது அவசியம்.

மேடையில் பேசணும்னாலே பயமா இருக்கா? அதை போக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!

Insurance

சரியான நேரத்தில் உங்கள் காப்பீட்டின் கோரிக்கையை தாக்கல் செய்யுங்கள்

காப்பீட்டு கோரிக்கையை தாக்கல் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் நீங்கள் க்ளெய்ம் தாக்கல் செய்யவில்லை என்றால், உங்கள் இன்சூரன்ஸ் க்ளைம் நிறுவனம் அந்த கோரிக்கையை மறுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே சரியான நேரத்தில் காப்பீட்டுக் கோரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்வது முக்கியம்.

Latest Videos


Health Insurance

உங்கள் நோய் குறித்த உண்மையான தகவலை காப்பீட்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்

வெகு சிலர் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது தங்களுடைய நாள்பட்ட நோய்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. ஏனெனில் அது அவர்களின் பிரீமியத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த தவறு பின்னர் பெரிய விஷயமாக மாறும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், காப்பீட்டு நிறுவனம் உங்கள் கோரிக்கையை நிராகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் நோய் குறித்த உண்மையான தகவலை காப்பீட்டு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டியது அவசியம்.

Health insurance claim

வரம்புக்கு மேல் Claim செய்ய வேண்டாம்

உங்களுடைய பாலிசி வரம்பை விட அதிகமாக நீங்கள் க்ளைம் செய்தாலும், நிறுவனம் உங்கள் கோரிக்கையை நிராகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது தவிர, க்ளைம் செய்யும் போது முழுமையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கூட உங்கள் க்ளைமை நிராகரிக்கவும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் முடியும். எனவே வரம்பிற்கு மேல் காப்பீடு கோராதீர்கள். தேவையான அளவு மட்டும் காப்பீடு பெறவும்.

பாலிசியில் உள்ளவற்றுக்கு மட்டும் உரிமை கோரவும்

உங்கள் பாலிசி எதை உள்ளடக்கும் மற்றும் எதை உள்ளடக்காது என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதற்கு பாலிசியின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாக படிக்கவும். உள்ளடக்கப்படாத விஷயங்களுக்கு நீங்கள் உரிமை கோரினால், உங்கள் கோரிக்கை நிச்சயம் மறுக்கப்படும். 

3 % அகவிலைப்படி உயர்வு.. எகிறும் சம்பளம்.. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

click me!