5 நிமிடத்தில் Personal Loan.! Documents தேவையில்லை.! டக்குன்னு கிடைக்கும்!

Published : Jul 22, 2025, 08:58 AM IST

தனிநபர் கடன்கள் பெறுவதில் ஆவணங்கள் ஒரு பெரிய தடையாக உள்ளன. ஃபின்டெக் நிறுவனங்கள், மொபைல் செயலிகள், உள்ளூர் கடன் வழங்குநர்களிடம் ஆவணங்கள் இல்லாமல் கடன் பெறலாம். ஆனால், வட்டி விகிதம் மற்றும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்து கடன் பெறுவது அவசியம்.

PREV
15
ஈசியா லோன் வாங்கலாம்

தொழில் முனைவோர், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் பெரும்பாலும் தனிநபர் கடன்களைத் தேடுகிறார்கள். ஆனால், பல்வேறு ஆவணங்கள் தேவைப்படுவதால் கடன் பெறுவது சிரமமாகிறது. இதனை தீர்க்கும் வகையில், ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்கும் சில புதிய வழிகள் தற்போது கைகொடுக்கின்றன.

25
டிஜிட்டல் பிளாட்ஃபாரங்களை பயன்படுத்துங்கள்

தற்போது பல ஃபின்டெக் நிறுவனங்கள் (Fintech Companies) மற்றும் ஆன்லைன் கடன் நிறுவனங்கள், ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்குவதைச் சாத்தியமாக்கியுள்ளன. கைவசம் PAN கார்டு, ஆதார் மற்றும் வங்கி கணக்கு இருந்தால், சில நிமிடங்களில் கடன் பெற முடிகிறது. CIBIL மதிப்பெண்கள் மற்றும் வங்கி பண ஓட்டங்களைப் பொருத்து, வருமான ஆவணங்கள் இல்லாமலும் கடன் வழங்கப்படுகிறது.

35
மொபைல் செயலிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்

LazyPay, KreditBee, Nira, MoneyTap போன்ற செயலிகள், சிறிய தொகை கடன்களை ஆவணங்களின்றி வழங்குகின்றன. இவை பொதுவாக ₹10,000 முதல் ₹2 லட்சம் வரை வழங்குகின்றன. இந்த செயலிகள் உங்கள் பண ஓட்டம், மொபைல் பயன்பாடு, UPI செயல்பாடுகள் மற்றும் கடன் வரலாறு போன்றவற்றைப் பயன்படுத்தி உங்கள் தகுதியை கணக்கிடுகின்றன.

45
நேரடி கடன் கிடைக்கும்

சில தனியார் கடன் தருநர்கள் அல்லது NBFC நிறுவனங்கள் (Non-Banking Financial Companies), உள்ளூர் அடிப்படையில் கடன் வழங்குகின்றனர். இங்கு அடையாள ஆவணமோ, வங்கி பாஸ் புத்தகமோ இருந்தால் போதுமானது. இருப்பினும், இவர்களின் வட்டி வீதங்கள் அதிகமாக இருக்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.

55
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • அதிக வட்டி வீதம் அல்லது மறைமுக கட்டணங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் CIBIL மதிப்பெண் பாதிக்கப்படாதவாறு சரியான காலத்துக்குள் தொகையை செலுத்துங்கள்.
  • ஏதேனும் மோசடிகள் நடைபெறக்கூடியதைக் கருத்தில் கொண்டு, சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களிடம்தான் கடன் பெறவும்.

ஆவணங்கள் இல்லாமல் கடன் பெறுவது இன்று சாத்தியம் தான். ஆனால், அதற்கான சுய பொறுப்பும் விழிப்புணர்வும் அவசியம். நம்பகமான தொழில்நுட்ப மற்றும் நிறுவனங்களின் உதவியுடன், ஆவண சிக்கலின்றி கடன் பெற முடியும் என்பதை இன்று பலர் அனுபவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories