இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்கள் டயர்–1 அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் அதன் தனித்துவமான துறைகளில் சிறந்து விளங்கி, முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கின்றன.
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் எட்டு நகரங்கள் தற்போது டயர்–1 நகரங்கள் என்ற பட்டத்தை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் உள்ள வரிசையானது மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஹைதராபாத் 6வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
24
சென்னை ஹைதராபாத்
இந்த நகரங்கள் அனைத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மெட்ரோ ரயில், சர்வதேச விமான நிலையங்கள், பிரபல கல்வி நிறுவனங்கள் (IIT, IIM போன்றவை) போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியிலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்நகரங்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.
34
டயர் 1 நகரங்கள்
ஒவ்வொரு நகரமும் தனித்தன்மையால் பிரபலமாக உள்ளன. மும்பை நிதி மற்றும் பங்குச்சந்தையின் தலைநகரம். டெல்லி அரசியல் மையமாக திகழ்கிறது. பெங்களூரு தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடி, சென்னை தொழில்துறை மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தா கலாச்சாரம் மற்றும் கலை உலகில் பிரசித்தி பெற்றது. ஹைதராபாத் ஐடி மற்றும் மருந்து உற்பத்தியில் வலுவான நிலையை பெற்றுள்ளது. புனே கல்வி மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் பிரபலமானது; அகமதாபாத் ஜவுளித்துறையில் முன்னணி வகிக்கிறது.
இத்தகைய டயர்–1 நகரங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சியை முன்னோக்கி இட்டுச் செல்கின்றன. அதிக முதலீடுகள், வேலை வாய்ப்புகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஆகியவை மக்களை இந்த நகரங்களுக்கு அதிகமாக ஈர்க்கின்றன. நகர்ப்புற மேம்பாடுகள் வேகமாக நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் இந்நகரங்கள் இந்தியாவின் நவீனமயமாக்கலின் அடித்தளம் ஆகத் தொடரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.