இந்த புதிய முறையில், டோல் பூத்களில் தடுப்புகள் இருக்காது. வாகனங்கள் நிற்காமலேயே கடந்து செல்லலாம். ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் மூலம் டோல் கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும். இந்த சிஸ்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 41,500 வாகனங்கள் இந்த டோல் பிளாசாவைக் கடந்து சென்றுள்ளன.
பயண நேரம் மிச்சமாகும்
இந்த புதிய வசதியால், டோல்களில் போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் மிச்சமாகும், எரிபொருள் சிக்கனமாகும், மற்றும் வாகனப் புகையால் ஏற்படும் மாசும் குறையும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
இந்த வசதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாவிட்டாலோ அல்லது ஃபாஸ்டேக் செல்லுபடியாகாவிட்டாலோ, வாகன உரிமையாளருக்கு 'எலக்ட்ரானிக் நோட்டீஸ்' (E-Notice) அனுப்பப்படும்.