ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் இந்தியா 10 இடங்கள் முன்னேறி 75வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் இப்போது 56 நாடுகளுக்கு முன் விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
உலகளாவிய பயண சுதந்திரத்தை அளவிடும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் இந்தியா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டில் இந்தியா 75வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10 இடங்கள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பல நாடுகளுக்கு எளிதாக பயணம் செய்யும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
25
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்
புதிய தரவரிசைப்படி, இந்தியர்கள் தற்போது 56 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா-ஆன்-அறைவல் மற்றும் இ-விசா மூலம் செல்ல முடியும். இதனால் முன்கூட்டியே நீண்ட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் பல இடங்களில் குறைகிறது. குறிப்பாக சுற்றுலா மற்றும் குறுகிய கால பயணங்களுக்கு இது சாதகமான மாற்றமாக உள்ளது.
35
இந்திய பாஸ்போர்ட் தரவரிசை
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் குடிமக்கள் எத்தனை நாடுகளுக்கு முன் விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதே அதன் தரவரிசையை தீர்மானிக்கிறது. அதிக இடம் பெற்ற நாடுகளுக்கு அதிக பயண சுதந்திரம் கிடைக்கும் என்பது இதன் அடிப்படை கருத்தாகும்.
இந்த ஆண்டு சிங்கப்பூர் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா தொடர்ந்து முன்னணி இடங்களில் உள்ளன. பல ஐரோப்பிய நாடுகளும் உயர்ந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை உலகளாவிய பயணத்தில் அதிக சுதந்திரம் வழங்கும் நாடுகளாக கருதப்படுகின்றன.
55
பாஸ்போர்ட் ரேங்க் 2026
இந்தியாவின் தற்போதைய 75வது இடம், 2006இல் இருந்து 71வது இடத்தை விட சிறிது பின்னிலையில் இருந்தாலும், கடந்த ஆண்டை விட முன்னேற்றமாகும். இது இந்தியர்களுக்கான சர்வதேச பயண வாய்ப்புகள் மேம்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகிறது. எதிர்காலத்தில் மேலும் நாடுகள் விசா சலுகை வழங்கினால், இந்தியப் பாஸ்போர்ட் வலிமை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.