இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. எப்படி டிக்கெட் பெறுவது என்பதற்கான மூன்று தீர்வுகளையும், ஆன்லைன் முன்பதிவுக்கான ஆதார் இணைப்பு விதியையும் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே தற்காலிக (தட்கல்) டிக்கெட் விதிமுறைகளை கடுமையாக வருகிறது. இனி டிக்கெட் கவுண்டரில் தட்கல் டிக்கெட் வாங்கினாலும் ஓடிபி கட்டாயம். விண்ணப்பப் படிவத்தில் உங்கள் மொபைல் எண் எழுத வேண்டும், அதை கிளார்க் சிஸ்டத்தில் சேர்ப்பார். அதன் பிறகு வரும் ஓடிபி-ஐ சரிபார்த்தால்தான் டிக்கெட் கொடுக்கப்படும். ஆனால், “மொபைல் இல்லாதவர்கள் எப்படி தட்கல் டிக்கெட் வாங்குவது?” என்ற கேள்விக்கு ரயில்வே மூன்று தீர்வுகளை தெரிவித்துள்ளது.
25
எப்படி பயன்படும் இந்த ஓடிபி விதி?
ரயில் டிக்கெட் தவறாக பயன்படுத்தப்படும் நிலைகளை தடுக்கவும், டிக்கெட் புரோக்கர்களை கட்டுப்படுத்தவும் ஓடிபி முறையை ரயில்வே கொண்டு வருகிறது வருகிறது. ஆன்லைனில் ஏற்கனவே இந்த நடைமுறைகள் உள்ளன. இப்போது கவுண்டரிலும் இதே விதி பின்பற்றப்படும். 2025 ஜூலை மாதத்திலேயே அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், ஆன்லைன் தட்கல் டிக்கெட் பெற ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது.
35
மொபைல் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு இயக்குநர் திலீப் குமார் கூறியதாவது, உங்கள் குடும்ப உறுப்பினரின் மொபைல் எண் பயன்படுத்தலாம். உங்களுக்கு தெரிந்த நபரின் மொபைல் எண்ணை டிக்கெட்டில் கொடுத்து, ஓடிபி கேட்டுக்கொள்ளலாம். வரிசையில் உள்ள வேறு பயணி (ஆன்லைன் அவசரம் இல்லாதவர்) மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். இப்படி மூன்று வழிகளில் மொபைல் இல்லாதவர்களுக்கும் தட்கல் டிக்கெட் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி அறிவிப்பின்படி, 2025 ஜூலை 1 முதல் ஆதார் லிங்க் இல்லாமல் Tatkal டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியாது. ஐஆர்சிடிசி ப்ரொஃபைலில் ஆதார் சேர்க்கும் வசதி உள்ளது, எனவே பயணிகள் அதைச் செய்துவிட வேண்டும்.
55
ஆன்லைனுக்கும் ஓடிபி கட்டாயம்
ஜூலை 15, 2025 முதல் ஆன்லைன் தட்கல் முன்பதிவுக்கு Aadhaar ஓடிபி சரிபார்ப்பு தேவை. ஆதார்-க்கு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை உள்ளிடாமல் முன்பதிவு செல்லாது. டிக்கெட் மோசடிகளை தடுக்கவும் உண்மையான பயணிகளுக்கே டிக்கெட் கிடைக்கவும் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.