இந்திய ரயில்வே பயணிகளின் சாமான்களுக்கான இலவச எடை வரம்பை மீறினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பயண வகுப்புக்கும் தனித்தனி எடை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கியமான தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வே நிர்ணயித்துள்ள இலவச எடை வரம்பை மீறி சாமான்கள் எடுத்துச் சென்றால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடரில், விமான நிலையங்களில் இருப்பது போல ரயில்களிலும் கடுமையான பைசெஜ் விதிமுறைகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் நோக்கம், பயணிகளின் பாதுகாப்பையும், ரயில் இயக்கத்தின் ஒழுங்கையும் உறுதி செய்வதே எனவும் கூறப்பட்டுள்ளது.
24
இந்திய ரயில்வே புதிய விதிகள்
அமைச்சரின் விளக்கப்படி, ஒவ்வொரு பயண வகைக்கும் தனித்தனி அதிகபட்ச சாமான் எடை வரம்பும், இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எடையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த இலவச வரம்பை மீறி, ஆனால் அதிகபட்ச வரம்பிற்குள் சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணம், வழக்கமான லக்கேஜ் கட்டணத்தின் 1.5 மடங்கு ஆகும். மேலும், இந்த கட்டணத்தை பயணத்திற்கு முன்பே செலுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
34
ஸ்லீப்பர் வகுப்பு
வகுப்புவாரியான விதிமுறைகள் இதோ: ஏசி முதல் வகுப்பில் அதிகபட்சமாக 150 கிலோ வரை சாமான்கள் எடுத்துச் செல்லலாம்; இதில் 70 கிலோ வரை இலவசம். முதல் வகுப்பு அல்லது ஏசி 2 டயரில் அதிகபட்சம் 100 கிலோ, இலவசம் 50 கிலோ. ஏசி 3 டியர் மற்றும் ஏசி சேர் காரில் 40 கிலோ வரை மட்டுமே அனுமதி, அதுவே இலவச வரம்பும். ஸ்லீப்பர் வகுப்பில் அதிகபட்சம் 80 கிலோ, இலவசம் 40 கிலோ. இரண்டாம் வகுப்பில் 70 கிலோ வரை அனுமதி, இதில் 35 கிலோ இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
பயணிகள் தங்கள் இருக்கை அல்லது பெட்டிக்குள் வைத்துக் கொள்ளும் தனிப்பட்ட சாமான்களாக, டிரங்குகள், சூட்கேஸ்கள், பெட்டிகள் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அளவுக்கு அதிகமான அல்லது மிகப்பெரிய சாமான்கள் இருப்பின், அவற்றை பிரேக் வான் அல்லது பார்சல் வானில் தனியாக பதிவு செய்ய வேண்டும். ஆகவே, பயணம் செய்யும் முன் தங்களின் சாமான்களின் எடையை சரிபார்த்து, தேவையான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துவது, தொந்தரவில்லா ரயில் பயணத்திற்கு உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.