பொது போக்குவரத்து துறையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி நாடு முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் விஷேச நாட்கள், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விட கூடுதலாக ரயிலில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
இதனால் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!
train
இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைப்பாக ரயில்வே துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். இந்த டிக்கெட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் அக்டோபர் 31ம் தேதி வரை செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவில் எந்த மாற்றமும் இருக்காது அனைத்தும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள் அனைவருக்கும் எடுத்துச்செல்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.