அட, ஆதார் கார்டில் இவ்ளோ வசதி இருக்கா! ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

Published : Oct 17, 2024, 03:03 PM ISTUpdated : Oct 17, 2024, 04:15 PM IST

பெரும்பாலான இடங்களில் ஆன்லைனில் பணம் செலுத்தினாலும், சில இடங்களில் பணம் தேவைப்படுவதால், அருகில் ஏடிஎம் இல்லை என்றால், அது பெரிய பிரச்சனையாகிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் பயனர்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மைக்ரோ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷ் உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

PREV
16
அட, ஆதார் கார்டில் இவ்ளோ வசதி இருக்கா! ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!
AePS

தற்போது, ​​ஆன்லைன் தளங்களை மக்கள் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். தெரு வியாபாரிகள் முதல் பெரிய உணவகங்கள் வரை, ஸ்கேனர்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். இன்று கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டது.

இருந்தாலும் சில இடங்களில் ரொக்கப் பணம் தேவைப்படுகிறது. சில இடங்களில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி இல்லை என்றால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம். ஆனால் டெபிட் கார்டும் இல்லாதபோது சிக்கல் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் ஆதார் கார்டு உதவி செய்யும்.

26
Cardless Cash Withdrawal

ஆதார் அட்டையில் உள்ள எண்ணைப் பயன்படுத்திப் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இந்த ஆதார் கட்டண முறை AePS என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை எப்படி செயல்படுகிறது? இந்த முறையில் பணம் எடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

36
Aadhaar card

ஏடிஎம் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? அதற்காகத்தான் AePS வசதி உள்ளது. இந்த வசதி கொண்ட மைக்ரோ ஏடிஎம்மிற்குச் சென்று பணத்தை எடுக்கலாம். மைக்ரோ ஏடிஎம் இயந்திரத்தில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு கைரேகையைப் பதிவுசெய்ய வேண்டும்.

பிறகு, பணத்தை திரும்பப் பெறும் ஆப்ஷனைத் தேர்வு செய்து விரும்பும் தொகையை எடுத்துகொள்ளலாம். மைக்ரோ ஏடிஎம் அந்தத் தொகையை வழங்கிவிடும். பரிவர்த்தனை முடிந்ததும் அதற்கான ரசீதையும் எடுத்துக்கொள்ளலாம்.

46
Aadhaar Enabled Payment System

AePS என்றால் என்ன? இது முழுமையாக ஆதார் மூலம் இயக்கப்படும் பரிவர்த்தனை முறை ஆகும். இந்த சேவை ஆதார் அட்டை மூலம் பல வங்கி சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், பணம் எடுப்பது, பேலன்ஸ் பார்ப்பது, பணம் அனுப்பவது போன்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இந்தச் சேவையை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

56
AePS Withdrawal Limit

AePS முறையில் பணம் எடுப்பதற்கான வரம்பு அந்தந்த வங்கியால் தீர்மானிக்கப்படுகிறது. இது வழக்கமாக ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம். சில வங்கிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக AePS சேவையை வாடிக்கையாளர் விரும்பினால் மட்டும் வழங்குகின்றன. இருப்பினும், இந்த சேவை கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் கிடைக்கிறது.

இந்தச் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பணத்தை எடுக்கும்போது, சில விஷயங்களையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

66
AePS benefits

அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ ஏடிஎம்மில் மட்டுமே ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமாக நினைவில் இருக்க வேண்டும். பரிவர்த்தனை தொடர்பான ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இது தவிர, உங்கள் பரிவர்த்தனை முடிந்ததும், ரசீதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய வங்கிகளின் சேவை கிடைக்காத பகுதிகளில் பணத்தை எடுக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஆதார் அட்டை மூலம் பணம் திரும்பப் பெறும் செயல்முறை அதிக சிரமம் இல்லாமல், மிகவும் எளிமையாகவும் உள்ளது. ஏடிஎம்மில் இருந்துதான் பணம் எடுக்க வேண்டும் என்பதற்கு மாற்றாகவும் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories