இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சிலிண்டர் புக் செய்த 3-4 மணி நேரத்திற்குள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்.
கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவியது. சிலிண்டர் சப்ளை குறைவாக இருந்ததால், பொதுமக்கள் பல சிக்கல்களைச் சந்தித்தனர். இனி அந்த கவலை இல்லை.
25
புக் செய்த 3-4 மணி நேரத்திற்குள் சிலிண்டர்.!
சமையல் பாதியில் திடீரென கேஸ் தீர்ந்துவிட்டாலும் இனி கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் கூடுதலாக சிலிண்டர் இல்லாவிட்டாலும் பயம் வேண்டாம். காரணம், புக் செய்த 3-4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்.
35
இதன் மிகப்பெரிய ப்ளஸ் இதுதான்.!
வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் இந்த புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' என்ற இந்த சேவையின் கீழ், 10 கிலோ எடை கொண்ட எடை குறைவான காம்போசிட் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். புக் செய்த சில மணிநேரங்களில் வீட்டுக்கே டெலிவரி கிடைப்பதுதான் இதன் மிகப்பெரிய ப்ளஸ்.
'இந்தியாஆயில் ஒன்' ஆப், இந்தியாஆயில் கஸ்டமர் போர்டல் அல்லது 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாக ரீஃபில் புக் செய்யலாம்.
55
புதிய இணைப்பு பெறுவதற்கும் குறைவான ஆவணங்களே போதும்.!
புக் செய்த 3 முதல் 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும். இந்த காம்போசிட் சிலிண்டர்கள் எடை குறைவாக இருப்பதால், தூக்கிச் செல்வது மிகவும் எளிது. புதிய இணைப்பு பெறுவதற்கும் குறைவான ஆவணங்களே போதும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.