300, 400 நாட்கள் பிக்சட் டெபாசிட்! அதிக வட்டியுடன் இந்தியன் வங்கியின் சிறப்புத் திட்டம்!

Published : Dec 01, 2024, 09:21 AM ISTUpdated : Dec 01, 2024, 09:22 AM IST

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சிறப்பு பிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல வட்டியைப் பெற முடியும்.

PREV
14
300, 400 நாட்கள் பிக்சட் டெபாசிட்! அதிக வட்டியுடன் இந்தியன் வங்கியின் சிறப்புத் திட்டம்!
Indian Bank Special Fixed Deposit Scheme

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பிக்ஸட் டெபாசிட் (FD) திட்டம் ஒன்றை வழங்குகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டியைப் பெற முடியும். இந்தியன் வங்கியின் இணையதளத்தின்படி, இந்தச் சிறப்பு FD திட்டம் 8.05% வட்டி விகிதத்துடன் கிடைக்கிறது.

24
Indian Bank FD Interest Rates

இந்தியன் வங்கியின் பொது நிலையான வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 2.80% முதல் 7.10% வரை இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் வெவ்வேறு காலகட்டங்கள் (7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை) மற்றும் முதலீட்டின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

34
IND SUPREME 300 DAYS Scheme

இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் 300 நாட்களுக்கானது. குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 3 கோடி ரூபாய் வரை முதலீடு செல்லலாம். இந்தத் திட்டம் FD மற்றும் MMD (பணச் சந்தை வைப்புத்தொகை) வடிவத்தில் கிடைக்கிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீத வட்டி கிடைக்கும். சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.05 சதவீத வட்டி கிடைக்கும்.

44
IND SUPREME 400 DAYS Scheme

இந்த சிறப்பு திட்டம் 400 நாட்களுக்கானது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 10,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதிலும் ரூ. 3 கோடி வரையிலும் முதலீட்டு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்தத் திட்டமும் FD மற்றும் MMD வடிவத்தில் கிடைக்கும். இதில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.30 சதவீதம் வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.05 சதவீதமும் வட்டி விகிதம் வழங்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories