IT Return | வருமான வரி ரீஃபண்ட் வரவில்லையா..? இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க!

First Published | Aug 24, 2024, 9:36 AM IST

அண்மையில் வருமாண வரித்தாக்கல் செய்தவர்களில் பலருக்கு ரீஃபண்ட் தொகை அணுப்பப்பட்டுவிட்டது. 22 நாட்கள் மேலாகியும் இன்னும் வரவில்லை என பலர் புலம்பி வருகின்றனர். உங்களுக்கு வரவில்லையா? ஏன் தெரியுமா?
 

Income Tax Return

நிதியாண்டு 2023-24க்கான வருமான வரித்தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் தொடங்கிய சரிபார்ப்பு பணிகள் மெல்ல மெல்ல நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பலருக்கும் ஐடி தாகல் செய்த பின்னரான ரிட்டன் தொகை வந்துவிட்டதாகவும், இன்னும் சிலர் தங்களுக்கு வரவில்லை என புலம்பிக்கொண்டும் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 

income tax Return

நீங்களும், 2023-24க்கான் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு ரீஃபண்ட் தொகைக்காகக் காத்தீருக்கிற்களா? இந்த செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். வருமான வரித் துறை வட்டார தகவலின் படி ஆகஸ்ட் 22, 2024 அன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மாத சம்பளம் பெருபவர்களின் சரிபார்த்து சமர்ப்பிக்கப்பட்டு உள்ள மொத்த வருமான வரித் தாக்கல் (ITRs) அறிக்கையில் 73.71% மட்டுமே செயலாக்கம் செய்து உரியவர்களுக்கு திரும்பப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
 

Tap to resize

Income Tax Return

வருமான வரி துறையின் (IT Department ) E-Filing Portal தரவுகளின்படி, சுமார் 7 கோடியே 13 லட்சத்து 901 ITR-கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அதில், 5 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரத்து 097 ITR-கள் பிராசஸ் செய்யப்பட்டு உரிய நபர்களுக்கு ரிட்டர்ன் தொகை அரவது வங்கிக்ணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் 26.29% அல்லது 1 கோடியே 87 லட்சத்து 47 ஆயிரத்து 804 ITR-கள் இன்னும் பிராசஸ் செய்யப்படவில்லை.
 

Income Tax Return

ஒருவேளை, நீங்களும் இந்த 26% குழுவில் இருந்தால், உங்கள் வருமான வரித்தாக்கல் (ITR) ஏன் இன்னும் பிராசஸ் செய்யப்படாததற்கான காரணம் குறித்து யோசித்து புலம்பிக்கொண்டு இருக்கலாம், தற்போது பலருக்கும் வருமான வரி தொடர்பான நோட்டீஸ் வந்துக்கொண்டுள்ளது. மேலும், வருமான வரித்துறை பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ITR சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளது.
 

Income Tax Refund

கடந்த 2013-ல் ITR படிவங்களை செயலாக்கம் செய்ய வருமான வரித்துறை 93 நாட்கள் ஆன நிலையில், 2023-ல் 11 நாட்களில் முடித்தது. தற்போது 2024ல், வருமான வரித்தாக்கல் முடிந்து 20 நாளில் 70% சதவீத ITRகள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அல்லது இம்மாத இறுதிக்குள் ​​மீதமுள்ள சுமார் ஒரு கோடி நபர்களின் ITR-களை வரித் துறை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிஆர் பண்ணியாச்சு.. எவ்வளவு நாட்களில் பணம் வரும் தெரியுமா? வருமான வரி ரீஃபண்ட் குறித்த அப்டேட்!
 

Income Tax Notice

வருமான வரி (ITR Filing) அறிக்கை தாக்கலில் ஏதேனும் தவறு செய்து நோட்டீஸ் பெற்றாலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. பின்னர், முறையான விளக்கத்தைக் கொடுத்து சரிசெய்துக்கொள்ளவும் வருமான வரித்துறை சார்பில் நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
 

Latest Videos

click me!