சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்த தங்கம்.! 5 நாட்களில் தலைகீழ் மாற்றம்- அதிர்ச்சியில் மக்கள்

First Published | Nov 22, 2024, 9:43 AM IST

இந்தியாவில் தங்கத்தின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகம். கடந்த காலத்தில் தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற நிகழ்வுகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

GOLD

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும,  எதிர்கால முதலீடாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் தங்க நகை கடைகளில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் கூட்டமாகவே எப்போதும் காணப்படும். அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

GOLD

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

இது அடுத்தடுத்த வருடங்களில்  ராக்கெட் வேகத்தை விட அதிகமாக உயர்ந்தது. சுமார் 14 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு மட்டுமே 50 ரூபாய் அளவிற்கு அதிகரித்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு கிராம் 25 ஆயிரம் ரூபாயையும், ஒரு சவரன் 2 லட்சத்தையும் எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் நகைக்கடைகளில் மட்டுமே நகைகளை பார்க்கும் நிலை உருவாகும் என கருதப்பட்டது.

Tap to resize

GOLD

திடீரென சரிந்த தங்கம் விலை

இந்த நிலையில் தான் அமெரிக்க தேர்தல் முடிவுகளால் தலைகீழாக மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை எட்டிப்பார்த்தது. ஆனால் அடுத்த ஒரு வாரத்திலையே சரசரவென தங்கத்தின் விலை சரிந்தது. குறிப்பாக 60 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் 55ஆயிரம் ரூபாய்க்கு குறைந்தது. இது தான் சூப்பர் சான்ஸ் என மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு தங்கத்தை வாங்கி வந்தார்கள்.

GOLD

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் இந்த தங்கத்தின் விலையானது எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் அதிகரிக்கும் என கூறப்பட்டது. அதன் படியே கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது தினந்தோறும் 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை அதிகரித்து வருகிறது.  இந்தநிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வுக்கு போர் தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரால் தங்கத்தின் மீதான முதலீடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.  டாலரில் முதலீடு செய்தவர்கள் தற்போது  தங்கத்தில் மீண்டும் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

GOLD

இன்றைய தங்கம் விலை என்ன.?

நேற்று கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து  57ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது. இதனிடையே இன்று தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது அந்த வகையில் ஒரு கிராம் 7225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன் படி  57ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் ஒரு சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்துள்ளது. 

Latest Videos

click me!