கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் செய்வது அறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Gold Rate
தங்கத்தின் விலை என்ன தான் உயர்ந்து கொண்டே சென்றாலும், பெங்களுக்கு அதன் மீதான மோகம் குறைந்ததாக இல்லை. திருமணம் தொடங்கி, காது குத்துதல், பிறந்த நாள் விழா, பிரசளிப்பு, சடங்கு, சம்பிரதாயம் என அனைத்து நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக தங்கம் உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரமும் நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளீட்டை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் கண்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை யெ்யப்படுகிறது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.