Online Works | முதலீடே செய்யாமல் வருமான ஈட்ட சில ஐடியாக்கள்!

First Published | Aug 31, 2024, 3:23 PM IST

இந்த செய்தித் தொகுப்பு எவ்வாறு முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை விளக்குகிறது. இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகுதல் முதல் டேட்டா என்ட்ரி வேலைகள் வரை பல்வேறு வாய்ப்புகளை இது எடுத்துக்காட்டுகிறது.
 

Online Work

இண்டெர்னட் உலகில் உண்மையில், நீங்கள் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. இந்த வழிகளில் வரும் பணத்தை எந்தவொரு ஆபத்திலோ அல்லது, நிதி விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று கவலைப்படத் தேவையில்லை.

முதலீடே இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சில சிறந்த வழிகள் இதோ!

Online Work

இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகுங்கள்

முதலீடும் இல்லாமல், நேரக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், வீட்டிலிருந்து வேலை செய்து, ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று இந்த இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி (Point of Salce Person ) ஆக ஆவது!.

ஒரு PSOP என்பவர் ஒரு இன்சூரன்ஸ் Agent ஆவார், அவர் ஒரு குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Insurance Product-களை ஆன்லைனில் விற்கிறார்.

இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆவதற்கு நீங்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். மேலும், ஜெனரல் / லைஃப் இன்சூரன்ஸ் உரிமத்தைப் பெற IRDAI வழங்கும் 15 மணி நேர கட்டாய பயிற்சியை முடிக்க வேண்டும். இப்பணியில், நீங்கள் எவ்வளவு பாலிசிகளை விற்கிறீர்களோ, அதற்கேற்றார் போல் அதிக வருமானம் பெற முடியும்.
 

Tap to resize

Online Work

ஃப்ரீலான்ஸிங் மூலம்

Freelancing வேலை என்பது ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும், மேலும் இந்த freelancing வேலையைத் தொடங்க உங்களுக்கு எந்த முதலீடும் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம். முக்கியமான அல்லது உண்மையாக சம்பளவம் வழங்கும் freelancing போர்ட்டல்களை அடையாளம் கண்டு பணியைத் தொடங்க வேண்டும். freelancing பணியைத் தொடர கணினி அறிவு தெரிந்திருக்க வேண்டும்.
 

Online Work

ஆன்லைனில் பொருட்கள் விற்பனை

வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை என்பது, முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்து எளிதாக பணம் சம்பாதிக்க இது மற்றொரு வழியாகும். இதில், உங்கள் உழைப்பை முதலீடாக கொடுக்க வேண்டும். சமையல் பொருட்களோ அல்லது கைவினை பொருட்களோ போன்றவை கண்கவரும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

கோடிக்கணக்கில் புரளும் டாப் 10 பணக்கார என்ஆர்ஐக்கள்; ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியீடு!
 

Online Work

டேட்டா என்ட்ரி வேலை

முதலீடு இல்லாமல் ஆன்லைன் வேலை தேடுபவர்களுக்கு Data Entry (டேட்டா என்ட்ரி) மற்றொரு விருப்பமாகும். நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால் ஒரு கணினி அல்லது லேப்டாப் வீட்டில் இருந்தால் போதும். மேலும் இது, பார்ட் டைம் வேலையைத் தேடும் மாணவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த டேட்டா எண்ட்ரி பணியில் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹ 300 முதல் ₹ 1,500 வரை சம்பாதிக்கலாம். நம்பகமான நிறுவனத்தில் பணியை தேடித் தொடங்குவது கட்டாயம்

Latest Videos

click me!