ஊழியர்களுக்கு மூன்றரை கோடி மதிப்பில் கார், பைக்குகளை தீபாவளி பரிசாக வழங்கிய நிறுவனம்!

First Published | Oct 13, 2024, 7:13 PM IST

Hyundai to Mercedes Benz Diwali Gift: சென்னையைச் சேர்ந்த டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 28 கார்களையும், 29 பைக்குகளையும் தீபாவளி பரிசாக வழங்கியுள்ளது.

Diwali Gift - 28 Cars and 29 Bikes

Hyundai to Mercedes Benz Diwali Gift: தீபாவளி நெருங்க நெருங்க முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பலவிதமான பரிசுகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்று ஒருபடி மேல் சென்று கார்களையும், பைக்குகளையும் பரிசாக கொடுத்து ஊழியர்களை திக்கு முக்காட செய்துள்ளது. அந்த நிறுவனம் எது, எத்தனை ஊழியர்களுக்கு இது போன்று கார்களையும், பைக்குகளையும் கொடுத்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க…

Hyundai to Mercedes Benz Diwali Gift

சென்னை செம்மஞ்ச்சேரி மற்றும் நாவலூரில் இயங்கி வரும் நிறுவனம் தான் இந்த டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தான் தனது ஊழியர்களுக்கு 28 கார்களையும், 29 பைக்குகளையும் பரிசாக கொடுத்திருக்கிறது. இவற்றின் மதிப்பு சுமார் மூன்றரை கோடி இருக்குமாம். ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாட்த்தின் போது 9ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு காரும், 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த பரிசுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமே இனி வரும் காலங்களில் அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Tap to resize

Diwali Gift Hyundai to Mercedes Benz

இந்நிறுவனம் பரிசாக கொடுத்த கார்களில் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி மற்று மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய பிராண்டுகள் கொண்ட கார்கள் அடங்கும். இதில் மற்ற கார்களை விட பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்பது பலரது நீண்ட நாள் கனவு. அந்த கனவு இந்த நிறுவனத்தின் மூலமாக இந்நிறுவன ஊழியர்களுக்கு நிறைவேறியுள்ளது. 

Hyundai to Mercedes Benz Diwali Gift

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் கண்ணன் கூறியிருப்பதாவது: நிறுவனத்தின் வெற்றிக்கு ஊழியர்களின் முயற்சி தான் காரணம். அதற்கு எங்களது பாராட்டுகள். ஊழியர்கள் தான் எங்களது சொத்து என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் 180 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது திறமை ஆகியவற்றை கொண்டு அவர்களது சேவை மதிப்பீடு அடிப்படையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Chennai Based company gifts Hyundai, Mercedes-Benz

இதற்கு முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு 2 மூத்த ஊழியர்களுக்கு சொகுசு கார்களை இந்நிறுவனம் வழங்கியது. அதன் பிறகு பைக்குகளை பரிசாக வழங்கி வந்தது. இந்நிறுவனம் கூடுதல் பொறுப்பாக திருமணங்களுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. இதுவரையில் நிதியுதவி ரூ.50 ஆயிரம் வரை இருந்தது. இந்த ஆண்டு முதல் இந்த திருமண நிதியுதவி தொகையானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Diwali Gift to Employees

இந்த செயல்பாடானது ஊழியர்களின் மன வலிமையை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். பொதுவாக அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை வேலையில் திருப்தி இல்லை என்று கூறி பல நிறுவனங்கள் ஏராளமானோரை வேலை இழக்கச் செய்திருக்கிறது. இது குறித்து பலரும் அறிந்திருப்போம். ஆனால், தீபாவளி போனஸாக இப்படியொரு பரிசு கொடுக்கும் நிறுவனங்கள் குறைவான எண்ணிக்கையிலே உள்ளன.

Latest Videos

click me!