வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு UPI எப்படி பயன்படுத்துவது? எந்தெந்த நாடுகளில் UPI வேலை செய்யும்?

Published : Jan 19, 2025, 11:27 AM ISTUpdated : Jan 19, 2025, 11:49 AM IST

வெளிநாடு பண பரிவர்த்தனைகளுக்கு UPI எப்படி பயன்படுத்துவது? எந்தெந்த நாடுகளில் UPI வேலை செய்யும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு UPI எப்படி பயன்படுத்துவது? எந்தெந்த நாடுகளில் UPI வேலை செய்யும்?
UPI Transactions

UPI பண பரிவர்த்தனை (UPI Transaction) 

Unified Payments Interface (UPI) என்று அழைக்கப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பிறருக்கு பணம் அனுப்பவும், பணம் பெறவும் UPI பெரிதும் உதவியாக இருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் UPI மூலம் இந்தியா முழுவதும் 15,547 கோடி எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என்றும் 223 லட்சம் கோடி நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

24
UPI Foreign Transaction

வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் (Foreign Transaction)

GPay, PhonePe, Paytm உள்ளிட்ட ஆப்ஸ்கள்  UPI பண பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளன. இதேபோல் ஏராளமான வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும்  UPI பண பரிவர்த்தனை ஆப்ஸ்களை கொண்டுள்ளன. இந்தியாவில் நாம் பண பரிவர்த்தனைகளுக்கு UPI எளிதாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு UPI பயன்படுத்தலாமா? செல்லுபடியாகுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்.. UPI மூலம் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். 

கிரெடிட் கார்டு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வது எப்படி?

 


 

34
UPI Transaction Apps

எப்படி பயன்படுத்துவது? 

GPay, PhonePe, Paytm போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸை எங்கு பயன்படுத்தலாம்? வெளிநாடு பண பரிவர்த்தனைகளுக்கு UPIஐ எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து பார்க்கலாம்.

* வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு UPIஐ செயல்படுத்த, முதலில் UPI பயன்பாட்டைத் திறக்கவும்.

* பின்பு சுயவிவரத்தைத் Profile திறக்கவும்.

* பிறகு உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, UPI இன்டர்நேஷனல் (UPI International) அல்லது UPI குளோபல் (UPI Global) என்பதை ஓப்பன் செய்யவும்.

* பின்பு செல்லுபடியாகும் காலத்தைத் தேர்ந்தெடுத்து, UPI பின் நம்பரை உள்ளிட்டு இந்த அம்சத்தை செயல்படுத்தவும். 

இந்த வழியில், ஒவ்வொரு பயன்பாட்டையும் தனித்தனியாக செயல்படுத்த வேண்டும். ஒரே பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட பல UPI ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தினால், மேற்கண்ட வழிமுறைகளை ஒவ்வொரு ஆப்ஸிலும் தனித்தனியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.


 

44
UPI Transactions Banks

UPI ஆப்ஸ்கள்

இப்போது சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ், பூடான், நேபாளம், யு.ஏ.இ, மலேசியா, ஓமன், கத்தார், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் UPI பண பரிவர்த்தனை பயன்படுத்த முடியும். போன் பே (PhonePe), பீம் (BHIM), பெடரல் பேங்க் (FedMobile), ICICI பேங்க் (iMobile), IndusInd பேங்க் (BHIM Indus Pay), சவுத் இந்தியன் பேங்க் (SIB Mirror+) ஆகிய UPI ஆப்ஸ்கள் சர்வதேச மொபைல் எண்களை சப்போர்ட் செய்கின்றன.

மேலும் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கனரா பேங்க் சிட்டி யூனியன் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், பெடரல் பேங்க், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய வங்கிகள் UPIகளுக்கு சர்வதேச மொபைல் எண்களை சப்போர்ட் செய்கின்றன. இன்னும் பல்வேறு நாடுகளிலும் UPIபண பரிவர்த்தனையை கொண்டு வர NPCதயாராகி வருகிறது. 

கிரட்டி கார்டு என்றால் என்ன? நல்ல கார்டை தேர்வு செய்வது எப்படி?

Read more Photos on
click me!

Recommended Stories