வங்கிக் கணக்கு இல்லாமல் ஆன்லைன் பேமெண்ட்! ரொம்ப ஈசியான வழி இதுதான்!!

First Published | Nov 10, 2024, 10:11 AM IST

கூகுள் பே செயலியில் பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு இல்லாமல் கூட பணம் அனுப்பும் வசதி அவற்றில் மிக முக்கியமானது. இது ஆன்லைன் பேமெண்ட் பயனர்களை அதிகரிக்க உதவுகிறது.

Google Pay

கூகுள் பே செயலியில் சமீபத்தில் சில புதிய கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் இந்திய பயனர்களை மனதில் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் எளிதாக பணம் செலுத்தவும் பணத்தை நிர்வகிக்கவும் முடியும். இப்போது வங்கிக் கணக்கு இல்லாமல் கூட Google Pay மூலம் UPI முறையில் பணம் செலுத்தலாம்.

UPI Circle

இந்த அம்சத்தின் உதவியுடன் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்காமலே  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். உங்கள் கூகுள் பே கணக்கில் அவர்களை இணைப்பதன் மூலம் அவர்கள் ஆன்லைன் பேமெண்டுகளை மேற்கொள்ள அனுமதிக்கலாம். Google Pay செயலியில் உள்ள யுபிஐ சர்க்கிள் (UPI Circle) அம்சத்தின் மூலம் இரண்டாம் நிலை பயனர்களை இணைக்க முடியும்.

Tap to resize

UPI payment

இதில், முதன்மை கூகுள் பே பயனர் UPI பரிவர்த்தனையின் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்கள். இரண்டாம் நிலைப் பயனர்களான சேர்க்கப்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்தும் வசதியை அனுமதிக்கலாம்.

முதன்மை பயனர் தான் இணைக்கும் இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு ரூ.15,000 வரை மாதாந்திர வரம்பை அமைக்கலாம். இரண்டாம் நிலை பயனர் ஒரு மாதத்தில் இந்த வரம்பு வரை மட்டும் ஆன்லைன் பெமெண்டுகளை மேற்கொள்ளலாம்.

Online payment without Bank account

இது உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு வகையான ப்ரீபெய்டு வவுச்சராகும். இந்த வவுச்சரை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்காமல் பணம் செலுத்தலாம். கூகுள் பே செயலியில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தவும் பயன்படுத்தலாம்.

Use Google Pay without Bank account

இந்த அம்சத்தின் உதவியுடன், மின்கட்டணம், சிலிண்டர் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் போன்ற பல தேவைகளுக்கு பணம் செலுத்தலாம். அனைத்து கட்டணங்களையும் ஒரே இடத்தில் கண்காணிக்கலாம்.

UPI Lite

கூகுள் பே கணக்கில் உங்கள் RuPay கார்டை இணைக்கும் வசதியும் வந்துள்ளது. இது தவிர யுபிஐ லைட் (UPI Lite) அம்சத்தின் மூலம் அன்றாடம் செய்யும் சிறிய செலவுகளை தடையின்றி விரைவாக மேற்கொள்ள முடியும். UPI லைட்டில் இருப்பு குறையும்போது தானாகவே ரீசார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

Latest Videos

click me!