வெள்ளியின் தூய்மை... தெரிந்த உலோகம்! தெரியாத ரகசியம்!

Published : Jun 07, 2025, 01:57 PM IST

தங்கத்திற்கு இணையாக வெள்ளி பொருட்களின் மவுசு அதிகரித்துள்ளது. வெள்ளி நாணயங்கள் சேமிப்பிற்கான புதிய வாய்ப்பை வழங்குகின்றன. தூய்மையான வெள்ளி 92.5% வெள்ளியையும் 7.5% பிற உலோகங்களையும் கொண்டிருக்கும்.

PREV
16
வசீகரிக்கும் வெள்ளி எனும் மாய உலோகம்

சொட்டு நீலம் போட்ட யூனிபார்ம் வெள்ளை சட்டையை போல எப்போதும் தும்பை பூ வெண்மையாய் காணப்படும் வெள்ளி பொருட்கள் தற்போது தங்கத்தின் நிறத்தில் பொன்நிறமாக காணமுடிகிறது. கொலுசு மெட்டி காப்பு என ஒரு சில பொருட்களே ஒரு காலத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தோடு, மூக்குத்தி, செயின், மோதிரம், நெக்லஸ் என தங்க ஆபரணங்களுக்கு ஈடாகவே வரிசைகட்டி நிற்கின்றன.

26
நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வெள்ளி

தங்க நாணயங்களை போலவே வெள்ளி நாணயங்களையும் சிறு முதலீட்டாளர்கள் வாங்கி சேகரிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வெள்ளிப் பொருள்கள் மற்றும் வெள்ளி நகைகளின் டிசைன்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் பிள்ளைகளின் திருமணம் போன்ற எதிர்கால நிகழ்வுகளுக்காக வெள்ளியைச் சேமிக்க நினைத்தால், வெள்ளிப் பொருள்களையோ, வெள்ளி நகைகளையோ சேமிக்காமல் வெள்ளி நாணயங்களை வாங்கிச் சேமித்து வரலாம். தேவைப்படும்போது, அவற்றை உங்களுக்கு வேண்டிய பொருள்களாக மாற்றிக் கொள்ளலாம்.

36
தூய்மையான வெள்ளி இதுதான்!

தங்கத்தைப் போலத்தான் வெள்ளியையும் தூய்மையாக வைத்து ஆபரணங்கள் செய்ய முடியாது. 100 சதவீதம் தூய்மையான வெள்ளியைக் கொண்டு வெள்ளிப் பொருள்க‌ள் எதுவும் செய்ய முடியாது. வெள்ளியுடன் ஒரு குறிப்பிட்ட அளவு தாமிரத்தை சேர்த்து உருக்கி கிடைக்கும் கலவையில் தான் வெள்ளி பொருட்கள் தாயாரிக்கப்படுகின்றன. வெள்ளியைப் பொறுத்தவரையில் தரமான வெள்ளி என்பது 92.5% தூய வெள்ளியையும் 7.5% தாமிரம் போன்ற பிற உலோகக் கலவையையும் கொண்டதாக இருக்கும் என்கின்றனர் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்.

46
தூய்மையை கணக்கிடும் முறை

நீங்கள் எந்தவொரு வெள்ளிப் பொருளை வாங்கினாலும் அதில் 925 என்ற எண்ணானது பொறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம் அப்படி இருந்தால் அந்த வெள்ளியானது 92.5% தூய்மையான வெள்ளி என வெள்ளி நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.925 உலோக கலவையில் தயாரிக்கப்படும் வெள்ளி மட்டுமே நிறம் மாறாமல் பொலிவு குறையாமல் இருக்கும் என்கின்றனர் அத்துறை வல்லுணர்கள்.

56
வெள்ளி பொருட்களை இப்படி பாதுகாக்க வேண்டும்

குங்குமச்சிமிழ், விளக்கு, தட்டு, தெய்வ உருவங்கள் உள்ளிட்ட பூஜை அறைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் என வெள்ளிப் பொருள்களை வாங்குபவர்கள், அவற்றை முறையாகப் ப‌ராமரிக்க வேண்டியது அவசியம். அதிலும் வெள்ளிக் குத்துவிளக்கை வேறு எந்தவொரு பொருளுடனும் சேர்த்துப் போட்டு வைக்கக் கூடாது என கூறுகின்றனர் வியாபாரிகள். அப்படி செய்தால் விளக்கின் கூரான முனைகள் மற்றும் விளிம்புகள் வளைந்துவிடும் எனவும் வெள்ளி சொம்பு, குடம் போன்றவற்றையும் சரியாக பராமறிக்காவிட்டால் நெளிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வெள்ளிப் பொருள்களைத் தனித்தனியாக அதற்கென இடம் கொடுத்து வைப்பதே பாதுகாப்பானது.

66
இப்படி முதலீடு செய்தால் பிரச்சினையே இல்லை

வெள்ளி ஈடிஎஃபில், வெள்ளியைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்கிற கவலை கிடையாது, அவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் வெளிப்படைத்தன்மை உள்ளது மற்றும் வரியும் குறைவு.வெள்ளி உலோக வடிவத்தில் வாங்கினால் அவற்றை விற்கின்றபோது சந்தை விலையை விட குறைவான விலையே கிடைக்கும். ஆனால் ஈடிஎஃப் சேமித்து வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, அதனால் செலவும் குறைவு மற்றும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கி விற்க முடியும்.எனினும் ஈடிஎஃப் மூலம் வெள்ளியில் முதலீடு செய்கிறபோது மேலாண்மை கட்டணம் மற்றும் செலவு விகிதங்கள் (expense ratios) போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது.

Read more Photos on
click me!

Recommended Stories