Real Vs Fake Money: கையில் இருக்கும் ரூபாய் நோட்டு கள்ளநோட்டா, உண்மையானதா என்பதை சில நொடிகளில் கண்டறியலாம். வாட்டர்மார்க், உயர்த்தப்பட்ட அச்சு உள்ளிட்ட அம்சங்களை பார்த்து, தொட்டு, சாய்த்துச் சரிபார்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கையில் கிடைக்கும் ₹100, ₹200, ₹500 நோட்டு உண்மையானதா? என்று சந்தேகம் வந்தால், அதை வெறுமனே பார்த்து முடிவு செய்ய வேண்டாம். இந்திய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டை அடையாளம் காண உதவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை Reserve Bank of India (RBI) அறிமுகப்படுத்தியுள்ளது. நோட்டைத் தொட்டு, வெளிச்சத்தில் பார்த்து, சாய்த்துப் பார்த்து, அச்சு மற்றும் எழுத்துகளை கவனித்தாலே எளிதாக கள்ள நோட்டை கண்டுபிடிக்க முடியும்.
26
நோட்டின் காகிதத்தையும் அச்சையும் கவனியுங்கள்
உண்மையான இந்திய ரூபாய் நோட்டின் காகிதமும் அச்சு அமைப்பும் சாதாரண பிரிண்டர் காகிதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
குறிப்பாக சில எழுத்துகள், உருவங்கள் மற்றும் கோடுகள் உயர்த்தப்பட்ட அச்சு (Intaglio/Raised Printing) முறையில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை விரலால் தொட்டுப் பார்க்கும்போது சிறிய அளவில் உயர்ந்து, சற்று கரடுமுரடான உணர்வைத் தரும்.
மகாத்மா காந்தியின் உருவப்படம், RBI முத்திரை மற்றும் சில முக்கிய அடையாளங்களில் உயர்த்தப்பட்ட அச்சு பயன்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை விரலால் மெதுவாகத் தடவிப் பார்க்கும்போது அச்சின் உயர்வையும் சற்று கரடுமுரடான உணர்வையும் அறிய முடியும்.
36
வெளிச்சத்தில் பிடித்துப் பாருங்கள் – Watermark
நோட்டை வெளிச்சத்துக்கு எதிராகப் பிடித்துப் பார்த்தால், மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் நோட்டின் மதிப்பைக் குறிக்கும் denomination வாட்டர்மார்க் ( watermark) தென்படும். இது நோட்டின் மேற்பரப்பில் அச்சிடப்பட்ட படம் போல இல்லாமல், காகிதத்துக்குள் உருவாக்கப்பட்ட நிழல் தன்மையுடன் காணப்படும்.
கவனம்: Watermark பகுதி தெளிவாக இல்லாமல், சாதாரணமாக மேலே அச்சிடப்பட்ட படம் போல இருந்தால் சந்தேகிக்கலாம்.
பல இந்திய ரூபாய் நோட்டுகளில் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக பாதுகாப்பு நூல் (Security Thread ) உள்ளது. நோட்டை வெளிச்சத்தில் பார்க்கும்போது பச்சை அல்லது நீல நிறத்தில் இந்த நூல் தொடர்ச்சியான கோடு போலத் தெரியும். சில நோட்டுகளில் அதில் “भारत” மற்றும் “RBI” போன்ற எழுத்துகளும் காணப்படும். அதனால், நோட்டை வெளிச்சத்தில் வைத்து security thread-ஐ தனியாகச் சரிபார்ப்பது நல்லது.
ரூபாய் நோட்டில் உள்ள Serial Number பகுதியில், எண்கள் இடமிருந்து வலமாகச் செல்லச் செல்ல சிறிது சிறிதாக பெரிதாகும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது, அனைத்து எண்களும் ஒரே அளவில் இருக்காது. வலதுபுறம் செல்லச் செல்ல அவற்றின் அளவு அதிகரிக்கும். இதுவும் நோட்டில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
56
முழு வடிவமாக தெரியும்
ரூபாய் நோட்டின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் இருக்கும் சில வடிவங்கள், வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றோடு ஒன்று சரியாக இணைந்து முழுமையான வடிவமாகத் தோன்றும். இதுதான் See-through Register. இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்ட வடிவங்கள் துல்லியமாகப் பொருந்துவது போல இருக்க வேண்டும்.
இதுதவிர வங்கிகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் Ultra Violet (UV) light மூலம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்க்க முடியும்.
Micro lettering-ஐ கவனியுங்கள்
சில பகுதிகளில் மிகவும் சிறிய அளவில் RBI மற்றும் denomination போன்ற எழுத்துகள் இடம்பெறும். இவை சாதாரணமாக வெறும் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியாமல் இருக்கலாம். Magnifying glass மூலம் பார்க்கும்போது நன்றாகத் தெரியும். Micro lettering-ம் இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக RBI குறிப்பிடுகிறது.
66
4 படி சோதனை – கடையில் பணம் வாங்கும்போது
முதலில் தொட்டுப் பாருங்கள்
அடுத்து வெளிச்சத்தில் பாருங்கள்
சாய்த்துப் பாருங்கள்
எழுத்து மற்றும் அச்சைப் பாருங்கள்
கள்ளநோட்டு என்று சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
சந்தேகமான நோட்டை மற்றொருவரிடம் செலுத்த முயற்சி செய்யக்கூடாது.
அதை அருகிலுள்ள வங்கி கிளைக்குச் சென்று சரிபார்க்கலாம்.
வங்கிகள் நோட்டுகளை ஆய்வு செய்து போலி (counterfeit) எனத் தீர்மானிக்க தேவையான நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.
வங்கிகளில் போலி நோட்டுகளை கண்டறிவதற்கான பயிற்சியும், note authentication முறைகளும் இருக்க வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.