Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!

Published : Jun 08, 2026, 12:24 PM IST

How to Get Lower Berth in Train: ரயில் பயணத்தின் பொழுது பலரும் லோயர் பெர்த் (கீழ் அடுக்கு) படுக்கைகளை விரும்புகின்றனர். கீழடுக்கு படுக்கைகள் கிடைப்பதற்கு ஐஆர்சிடிசி சொல்லும் ரகசிய ட்ரிக்கை இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
How to Get Lower Berth in Train

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். கழிவறை வசதிகள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக இருப்பதால் ரயில் பயணங்கள் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவும்போது பலருக்கும் மேலடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இது வயதானவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலெடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு முறையும் பயணத்தின் பொழுது கீழடுக்கு இருக்கை இருப்பவர்களிடம் இருக்கையை மாற்றித் தருமாறு கெஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:  IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!

25
ரயிலில் எப்படி டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது?

ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கீழடுக்கு இருக்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அது குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம். ரயிலில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது தானியங்கி கணினி மென்பொருள் மூலம் நடைபெறுகிறது. இதில் மனிதர்களின் தலையீடு எதுவும் இல்லை. ரயில் ஓடும் போது அதன் சமநிலையைப் பேணுவதற்காக மென்பொருள் முதலில் நடு இருக்கைகளை ஒதுக்குகிறது. இறுதியாகவே கீழடுக்கு மற்றும் மேல் இருக்கைகளை ஒதுக்கும். அதன் பின்னர் பக்கவாட்டு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

35
‘ரிசர்வேஷன் சாய்ஸ்’ ஆப்ஷன்

முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு கீழடுக்கு இருக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் டிக்கெட் முன்பதிவின்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது ‘ரிசர்வேஷன் சாய்ஸ்’ (Reservation Choice) என்கிற பகுதியில் Book Only if Lower Berth Allotted (கீழிருக்கை ஒதுக்கப்பட்டால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யவும்) என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்வதன் மூலம் கணினியில் கீழடுக்கு இருக்கை காலியாக இருந்தால் மட்டுமே உங்கள் டிக்கெட் உறுதியாகும். ஒருவேளை கீழடுக்கு இருக்கை இல்லையென்றால், டிக்கெட் பதிவாகாது. இதன் மூலம் டிக்கெட் எடுத்த பிறகு மேலடுக்கு கிடைத்து விட்டதே என்று வருத்தப்படுவதை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Train: ரயிலில் உங்கள் உடைமைகளை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ.!

45
‘சீனியர் சிட்டிசன்' கோட்டா

குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு டிக்கெட் எடுக்கும் பொழுது எப்போதும் ‘சீனியர் சிட்டிசன்’ கோட்டாவை பயன்படுத்த வேண்டும். இந்த கோட்டாவை பயன்படுத்தி முன்பதிவு செய்யும் பொழுது பலருக்கும் கீழடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பின்னர் மேலடுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டால் வருத்தப்படத் தேவையில்லை. பயணிகள் முதியவர்களாகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருந்தால் ரயிலில் உள்ள TTE-யை அணுகலாம். அவர் கீழடுக்கு இருக்கைகள் காலியாக இருந்தாலோ அல்லது வேறு யாராவது தனது இருக்கையை மாற்றிக் கொள்ள முன் வந்தாலோ அதை உங்களுக்கு ஒதுக்கித் தர TTE-க்கு அதிகாரம் உள்ளது.

இதையும் படியுங்கள்:  Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!

55
இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றுங்கள்

சுருக்கமாகச் சொன்னால் முன்பதிவு செய்வதற்கு முன்னரே சீனியர் சிட்டிசன் கோட்டாவை பயன்படுத்தி உள்நுழைந்து முன் பதிவு செய்யவேண்டும். அல்லது முன்பதிவு செய்யும் பொழுது Berth Preference என்பதில் லோயர் பெர்த் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். இந்த சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் நீண்ட தூர பயணம் மிகவும் வசதியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories