கடனை எளிதாக தீர்க்க 7 குறிப்புகள்!!
1. நிதி விஷயங்களில் தெளிவு..
நம்மில் பலர் செய்யும் தவறு என்னவென்றால், கணக்குப் பார்க்காமல் செலவு செய்வது. நீங்கள் அவ்வாறு செய்யாமல், வருமானம், செலவு, கடன்களின் விவரங்கள் போன்ற விஷயங்களில் முழுமையான புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள். அவசர நிலையில் நம் திறனுக்கு மீறி கடன் வாங்குகிறோம். அதுபோல சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் கடன் வாங்குகிறோம். இப்படி எல்லாம் சேர்த்து மொத்தம் எவ்வளவு கடன் இருக்குன்னு தெளிவா எழுதிப் பாருங்கள். அதேவிதமா நீங்க ஒரு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வருது. வேற ஏதாவது வருமானம் வருதா இல்லையா அப்படிங்கற விஷயங்களைக் கண்டுபிடிங்க. இதன் மூலம் மொத்த வருமானம் எவ்வளவு, செலவுகள் எவ்வளவு என்பது பற்றிய முழுமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.
முதலில் செலுத்த வேண்டிய கடன்கள்
முதலில் உங்களுக்கு எத்தனை வகையான கடன்கள் உள்ளன என்பதை முதலில் குறிப்பு எடுக்கவும். அதிக வட்டி கடன்களை முதலில் திருப்பிச் செலுத்துவது முக்கியம். அதிக வட்டி கடன்களை முதலில் கட்டுவிட்டால் சுமை குறையும். அதேபோல் விரைவில் செலுத்த வேண்டிய கடன் என்ன என்பதை பார்க்கவும். உங்களுக்கு கடன் கொடுத்தவர்களின் தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தவும். இல்லையெனில் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும். மீண்டும் அவசரத் தேவைக்காக கடன் கேட்டால் கொடுக்க மாட்டார்கள்.
கூடுதல் வருமான வழிகள்
வழக்கமான வருமானத்துடன் கூடுதலாக பக்க வருமானத்தை ஈட்ட முயற்சியுங்கள். கடனை விரைவாக செலுத்தி விடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய வேலைகள் ஏராளமாக உள்ளன. உங்களுக்கான வேலையை குறைந்த நேரத்தில் அதிக வருமானம் வரும் வகையில் திட்டமிடுங்கள்.
இப்போது சிறு குறு தொழில்களும் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. வியாபாரமும் துவங்கலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய சிறு குறு தொழில்களைச் செய்யலாம். உங்களால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால், வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை வைத்து நடத்தலாம்.
செலவுகளைக் குறைக்கவும்
தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம், நீங்கள் அதிக தொகையில் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். தேவையற்ற செலவுகள் என்றால், தேவை இல்லாத போது புதுத்துணி வாங்குவது, தேவை இல்லாத போது பயணம் செய்வது, மின்னணுப் பொருட்களை வாங்குவது போன்றவை. இவற்றால் பணம் செலவாவதே தவிர, எந்தப் பயனும் இல்லை. குறிப்பாக கடன்கள் அடைபடும் வரை இது போன்ற தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம்.
ஒருங்கிணைத்தல்
நீங்கள் வாங்கிய பல்வேறு வகையான கடன்களை ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த கடனாக மாற்றுவதன் மூலம், வட்டி விகித சுமை குறையும். உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வேறொரு வங்கியில் கார் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு அந்தந்த வங்கிகள் தனித்தனியாக வட்டி விகிதங்களை வசூலிக்கும். பொதுவாக தனிநபர் கடனுக்கு 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த இரண்டு கடன்களையும் சேர்த்து ஒரே வங்கிக்கு மாற்றும் வசதியை சில வங்கிகள் வழங்குகின்றன. அப்படிப்பட்ட வங்கிகளை கண்டுபிடித்து, ஒரே வங்கியில் இரண்டு கடன்களையும் சேர்த்து, வட்டி விகித சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
திட்டத்தை உருவாக்குதல்
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை கடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். அந்தத் திட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். இதற்கு உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் குறித்து உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். உதாரணமாக, 100 ரூபாய் சம்பாதித்தால், வீட்டுத் தேவைக்கு, மருத்துவச் செலவுக்கு என்று ஒதுக்குவோம். அதேபோல கடன்களை திருப்பிச் செலுத்த ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். இப்படி முறையாக கணக்குப் போட்டால், கடன்கள் பெரிய பாரமாக தெரியாது. சில காலங்களுக்குப் பிறகு, நமக்கே தெரியாமல் நம் கடன்கள் வேகமாகக் குறைந்துவிடும்.
அவசரத் தேவைக்கு புதிய கடன்
கடன்கள் அடைக்கப்பட்டு வருகின்றன என்பதற்காக மீண்டும் மீண்டும் கடன் வாங்காதீர்கள். ஏற்கனவே கடன்கள் சுமையாக மாறிவிட்டன என்றால், எவ்வளவு அவசர நிலையில் இப்படிக் கடன் வாங்கினோம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் புதிய கடன் வாங்க வேண்டிய அவசரநிலை ஏற்பட்டால், மீண்டும் கடன் வாங்காதீர்கள். இல்லையெனில், கடன் சுமையைத் தாங்க முடியாமல், தேவையற்ற எண்ணங்கள் வர வாய்ப்புள்ளது. தற்போது பல இளைஞர்கள் இப்படித்தான் கடன் வாங்கி, பின்னர் கஷ்டப்படுகிறார்கள்.