தங்கம் வாங்கப் போறீங்களா? இந்த லிமிட்டுக்கு மேல பான் கார்டு இல்லாமல் தங்கம் கிடைக்காது!

Published : Aug 05, 2024, 11:09 PM IST

தங்கம் வாங்கவும் கட்டுப்பாடு உள்ளது. வருமான வரி விதிகள் 1962 இன் விதி 114B இன் படி, ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம் வாங்குவதற்கு பான் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயம் ஆகும்.

PREV
17
தங்கம் வாங்கப் போறீங்களா? இந்த லிமிட்டுக்கு மேல பான் கார்டு இல்லாமல் தங்கம் கிடைக்காது!
Gold rules

பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் பண்டிகை நாட்களை ஒட்டி தங்கம் விற்பனை அதிகரிக்கிறது. தீபாவளியின்போது, ​​தங்கம் வாங்குவதும் பரிசளிப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

27
Gold limits

2020ஆம் ஆண்டில், அரசாங்கம் ரத்தினங்கள் மற்றும் நகைத்துறையை பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002 இன் வரம்பிற்குள் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் KYC விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

37
Gold holding limit

இந்தச் சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் குறிப்பிட்ட வரம்புக்கு அதிகமாக பணப் பரிவர்த்தனை செய்யும்போது அரசுக்கு அதைப்பற்றி அறிக்கை அளிக்க வேண்டும். அதாவது, ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகள் குறித்து பார் கார்டு, ஆதார் கார்டு விவரங்களுடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

47
Gold purchase

இதேபோல தங்கம் வாங்கவும் கட்டுப்பாடு உள்ளது. வருமான வரி விதிகள் 1962 இன் விதி 114B இன் படி, ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம் வாங்குவதற்கு பான் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயம் ஆகும்.

57
Gold buying

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST, ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளை தடை செய்கிறது. இதனால், ஒரே நாளில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக தங்கம் வாங்குவது வருமான வரி விதிகளை மீறும் செயலாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 271D பிரிவின்படி, பரிவர்த்தனை செயப்பட்ட தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்.

67
Gold jewellery and ornaments

முறையான வருமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை வைத்திருப்பது தடைசெய்யப்படவில்லை. ஆனால் சொத்து-வரிக் கணக்கில் அறிவிக்கப்பட்ட மொத்த எடையை விட அதிகமாக தங்கம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் 1994 சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77
Gold rates

தனிநபர்கள் வைத்திருக்கக்கூடிய நகைகள் மற்றும் ஆபரணங்களுக்கும் வரம்புகள் நிர்ணக்கப்பட்டுள்ளன. திருமணமான பெண்கள் 500 கிராம் வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories