இன்றைய சேமிப்பும் திட்டமிடலும் நாளைய சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும். விருப்ப ஓய்வு பெற்றவர்கள், சொத்து விற்று பணம் பெற்றவர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்து பிற்கால தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள நினைப்பதுண்டு. குறிப்பட்ட அளவு பணம் கையிருப்பில் இருக்கும் போது அதனை நிலையான வைப்புதொகையாக முதலீடு செய்ய அதிகம் பேர் விரும்புகின்றனர். அதற்கு அதிக வட்டிவிகிதத்தையும் எதிர்பார்க்கின்றனர்.
Fixed Deposit (FD)
ஒரு குறிப்பட்ட தொகையை நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்வதே நிலையான வைப்பு திட்டமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கிகள் சமீபத்தில் தங்கள் நிலையான வைப்பு RD வட்டி விகிதங்களை திருத்தியது குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் பணம் இருந்தால் அதனை வங்கிகளில் முதலீடு செய்ய விரும்பினல் இதோ கீழ் காணும் வங்கிகளில் உங்களுக்கான வங்கியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நிலையான வைப்புத் தொகைக்கு அதிக வட்டி விகிதம் தரும் சிறந்த 5 வங்கிகள் குறித்து இங்கு காணலாம்.