வெறும் 10,000 ரூபாய்க்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்! எல்லாரும் ஈசியா வாங்கலாம்!

Published : Nov 09, 2024, 08:32 AM IST

இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தருவதால் மக்கள் இதை விரும்பி வாங்குகிறார்கள். நீங்களும் இந்த ஸ்கூட்டரை வாங்க நினைத்தால், அதற்கு சூப்பரான வழி இருக்கிறது.

PREV
15
வெறும் 10,000 ரூபாய்க்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்! எல்லாரும் ஈசியா வாங்கலாம்!
Honda Activa Scooter

இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தருவதால் மக்கள் இதை விரும்பி வாங்குகிறார்கள். பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் இந்த ஸ்டைலிஷ் ஸ்கூட்டரை மிகவும் குறைவான பணத்தில் வாங்கிவிடலாம்.

25
Honda Activa Models

ஹோண்டா ஆக்டிவாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.76,684 முதல் ரூ.82,684 வரை உள்ளது. இதன் டாப் மாடலின் ஆன்ரோடு விலை ரூ.92,854. ஆக்டிவா மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் வெவ்வேறு அம்சங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப விலையும் மாறுகிறது.

35
Honda Activa at Rs.10,000

ஹோண்டா ஆக்டிவாவை குறைந்த செலவில் வாங்குவதற்கு EMI முறை சிறந்த வழி. நீங்கள் ரூ.10,000 முன்பணம் செலுத்தி ஆக்டிவாவின் பேசிக் மாடலை வாங்கலாம். இதற்கு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.80,000 கடனாகப் பெறலாம்.

 

45
Honda Activa EMI

ரூ.80 ஆயிரம் கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 9.7% என்ற அளவில் இருக்கும். இந்தக் கடனை 5 வருடங்களில் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.2,500 EMI செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.92,000 செலுத்த வேண்டியிருக்கும்.

55
Honda Activa Specifications

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த 109.51 சிசி எஞ்சின் உள்ளது. இது 7.79 பிஎஸ் ஆற்றலையும் 8.84 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது . இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக ஹோண்டா நிறுவனம் கூறுகிறது. ஸ்கூட்டரின் எடை 109 கிலோ. இது ஓட்டுவதற்கு மிகவும் லேசாகவும் வசதியாகவும் இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories