Gas Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

First Published Oct 1, 2024, 6:48 AM IST

Gas Cylinder Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை நிலவரம் என்ன  என்பதை பார்ப்போம்.

Gas Cylinder Price

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

Commercial Cylinder

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விலை உயர்ந்தது. இதனையடுத்து செப்டம்பர் மாதமும் சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்டது. 

Latest Videos


Commercial Cylinder Price

இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Domestic Use Cylinder

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. 

Commercial Cylinder Rate City Wise

இதேபோல் மற்ற மெட்ரோ நகரங்களிலும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் 1,694 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,804 ரூபாயாகவும், மும்பையில் 1,646 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Petrol Diesel Price

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 1ம் தேதி வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 198வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

click me!