சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தைக் குறைத்த ஹெச்டிஎஃப்சி வங்கி!

Published : Apr 14, 2025, 03:46 PM IST

ஹெச்.டி.எஃப்.சி. (HDFC) வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தைக் குறைத்த ஹெச்டிஎஃப்சி வங்கி!
HDFC Bank savings account

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளி குறைப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 2.75% ஆகக் நிர்ணயம் செய்துள்ளது. ரூ.50 லட்சத்திற்கு மேல் பேலன்ஸ் இருக்கும் கணக்குகளுக்கான வட்டியும் 3.5% இலிருந்த 3.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

25
HDFC Bank interest rates

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக, HDFC வங்கி அதன் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. 2011 இல் அதிகபட்சமாக 4% ஆக இருந்த வட்டி விகிதத்தை படிப்படியாகக் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளை ஒரு சேமிப்பு வழியாகக் கருதாமல், பரிவர்த்தனைகளுக்காகவே அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதிகப்படியான தொகை பிக்சட் டெபாசிட்களில்தான் உள்ளன. அதிர் வருமானம் அதிகமாக இருக்கும். இதனால் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு (CASA) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

35
HDFC Bank Savings

ஏப்ரல் 2020 இல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் சேமிப்பு விகிதத்தை 2.75% ஆகக் குறைத்துது. 2022 இல் அதை மேலும் 2.7% ஆகக் குறைத்தது. சேமிப்புக் கணக்குகளில் பணப்புழக்கம் இருந்தபோதிலும், அது டைம் டெபாசிட் கணக்குகளை விடக் குறைவாகவே உள்ளது. HDFC வங்கியின் முதலீட்டாளர் தரவுகளின்படி, சேமிப்பு கணக்ககுகளில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இருப்புத்தொகை உள்ளது. 0.25% வட்டி விகிதக் குறைப்பு வங்கியின் ஆண்டு வட்டியில் ரூ.1,500 கோடியை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45
HDFC Bank

முன்னதாக, ஏப்ரல் 1 முதல் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்த்து, HDFC வங்கி பிக்சட் டெபாசிட் விகிதங்களை 35-40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருந்தது. யெஸ் வங்கியும் அதன் FD விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருந்தது. பந்தன் வங்கி அதன் சேமிப்புக் கணக்கு விகிதங்களை 6% இலிருந்து 3-5% வரம்பிற்குக் குறைத்தது. பஜாஜ் ஃபைனான்ஸ் நீண்ட கால டெபாசிட்களுக்கான வட்டியை 0.25% குறைத்தது.

55
HDFC Bank hikes bulk FD rates, earn up to 7.15% for 15 months to 2 years tenor

இந்திய வங்கி அதன் 400 நாள் சிறப்பு வைப்புத் திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது, இது 7.3% வழங்கியது. இதேபோன்ற காலத்திற்கு அதிகபட்ச விகிதம் இப்போது 6.75% ஆகும், இது 55 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு.

Read more Photos on
click me!

Recommended Stories