கடன்கள் மீதான வட்டியைக் குறைத்த ஹெச்.டி.எஃப்.சி. வங்கி! மார்ச் 7 முதல் அமல்!

Published : Mar 10, 2025, 03:21 PM ISTUpdated : Mar 10, 2025, 03:52 PM IST

HDFC Bank cuts lending rate: ஹெச்.டி.எஃப்.சி. வங்கி எம்.சி.எல்.ஆல். (MCLR) விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. திருத்தத்திற்குப் பிறகு, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி MCLR இப்போது 9.20% முதல் 9.45% வரை இருக்கும். திருத்தப்பட்ட விகிதங்கள் மார்ச் 7, 2025 முதல் அமலுக்கு வரும்.

PREV
15
கடன்கள் மீதான வட்டியைக் குறைத்த ஹெச்.டி.எஃப்.சி. வங்கி! மார்ச் 7 முதல் அமல்!
HDFC Bank MCLR Update

மார்ச் 7, 2025 முதல் 2 ஆண்டு கால MCLR 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 9.45% இலிருந்து 9.40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத MCLR 9.20% ஆகவும், மூன்று மாத MCLR 9.30% ஆகவும் மாறாமல் உள்ளது. ஆறு மாத மற்றும் ஒரு வருட MCLR 9.40% ஆகவும், இரண்டு ஆண்டு MCLR 9.40% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுக்கான MCLR மாற்றமில்லாமல் 9.45% உள்ளது.

25
HDFC bank lending rates

MCLR என்பது ஒரு குறிப்பிட்ட கடனுக்கு ஒரு நிதி நிறுவனம் வசூலிக்க வேண்டிய குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இது கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகித வரம்பைக் குறிக்கிறது. கடன் வாங்குபவர்களின் நலன் கருதி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதனை 2016 இல் அறிமுகப்படுத்தியது.

35
HDFC Back Revised MCLR

திருத்தப்பட்ட MCLR விகிதங்கள்:

ஹெச்டிஎப்சி வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, 1 மாதத்துக்கு 9.20%, 3 மாதங்களுக்கு 9.30%, 6 மாதங்களுக்கு 9.40%, ஒரு வருடத்துக்கு 9.40%, இரண்டு ஆண்டுகளுக்கு 9.40% மற்றும் 3 ஆண்டுகளுக்கு 9.45% என எம்.சி.எல்.ஆர். விகிதம்  நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.

45
HDFC Bank base Rate

திருத்தப்பட்ட அடிப்படை விகிதம் 9.45% ஆக இருக்கும் என்றும் அது செப்டம்பர் 09, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும் ஹெச்டிஎப்சி வங்கி கூறியுள்ளது. HDFC வங்கியின் பெஞ்ச்மார்க் PLR (BPLR) செப்டம்பர் 09, 2024 முதல் ஆண்டுக்கு 17.95% ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 

55
HDFC Bank Loan Interest Rates

வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் உட்பட அனைத்து வகையான கடன்களின் மீதான வட்டி விகிதங்களும் MCLR விகிதத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இதன் மூலம் ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி சிறிதளவு குறையும்.

click me!

Recommended Stories