ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ் நாடார் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின் அதிக நன்கொடை வழங்குபவராக ரூ.2,153 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் இந்தோ எம்ஐஎம் டெக் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
ஹெச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டிலேயே மிக அதிகமாக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2024 நிதியாண்டில் சிவ் நாடார் அறக்கட்டளை மூலம் ரூ.2,153 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5.9 கோடி வீதம் நன்கொடை அளித்திருக்கிறார்.
நன்கொடையாளர்கள் பட்டியலில் அடுத்த நான்கு இடங்களில் உள்ளவர்கள் அளித்த மொத்த நன்கொடையை விட கிட்டத்தட்ட 60% அதிகமாக அளித்துள்ளார் சிவ் நாடார். தனிப்பட்ட முறையில் ரூ.1,992 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் இந்தோ எம்ஐஎம் டெக் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா ஆகியோர் முறையே ரூ.307 கோடி மற்றும் ரூ.228 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
24
Hurun India philanthropy list
ஹுரூன் இந்தியா பட்டியல்:
ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள நன்கொடையாளர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடை அளித்துள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை ரூ.352 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல் & பவர் ரூ.228 கோடியுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.900 கோடியுடன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பங்களிப்புகளில் முன்னணியில் உள்ளது. 2024 நிதியாண்டில் முதல் 10 நபர்கள் மொத்தமாக ரூ.4,625 கோடியை வழங்கியுள்ளனர். இது பட்டியலில் உள்ள மொத்த நன்கொடையில் கிட்டத்தட்ட 53 சதவீதமாகும்.
34
Rohini Nilekani
ரோகிணி நீலேகனி:
நந்தன் நீலேகனியின் மனைவி ரோகிணி நீலேகனியும் ரூ.154 கோடி நன்கொடை அளித்து முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார். இதன் மூலம் 2024 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களான நீலேகனி (6வது இடம்), கிறிஸ் கோபாலகிருஷ்ணன் (12வது இடம்), கே. தினேஷ் (30வது இடம்), எஸ்.டி. ஷிபுலால் (35வது இடம்) ஆகியோர் ரூ.563 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர்.
டாப் 10 நன்கொடையாளர்களில் இடம்பெறுவதற்கான வரம்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.83 கோடியாக இருந்தது. தற்போது ரூ.154 கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை அளிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இது 2019 இல் வெறும் 9 ஆக இருந்தது.
44
Zerodha co-founder Nikhil Kamath
நிகில் காமத்:
ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத், 38 வயதில், ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம் சுமார் ரூ.120 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். மிக இளம் வயதில் அதிக நன்கொடை அளித்தவராக இருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த 61 நபர்கள் கணிசமான நன்கொடைகளை வழங்குகியுள்ளனர். மொத்த நன்கொடைகளில் 30 சதவீதம் முப்பையிலிருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி (19%), பெங்களூரு (9%) நகரங்கள் உள்ளன.