உடனடியாக பணம் தேவைப்படும் நேரத்தில் கூகுள் பே மூலம் கடன் பெற முடியும். எளிமையான முறையில் பதிவுசெய்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
கூகுள் பே உங்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கடன் பெறும் செயல்முறையை எளிதாக்குகிறது. ஆனால் கூகுள் பே நேரடியாக எந்தக் கடனும் வழங்காது. கடன் கோரிக்கையையும் கூகுள் பரிசீலனை செய்யாது.
கூகுள் பே அப்ளிகேஷனில் உள்ள லோன் ஆஃபர்களும் “கடன்கள்” (Loan) என்ற பிரிவும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது. தகுதியான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூகுள் பே மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு தனிநபர் கடன் வழங்கும். கூகுள் பே கடன் கோரி விண்ணப்பிக்கும் வசதியை மட்டுமே வழங்குகிறது.
கடன் பெற்றதும் ஒவ்வொரு மாதமும், கூகுள் பே செயலியில் நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கிக் கணக்கில் இருந்து கடனுக்கான தவணை தொகை தானாகவே கழிக்கப்படும்.
கூகுள் பே மூலம் வாங்கும் கடனுக்கு 13.99% வட்டி விகிதம் விதிக்கபடுகிறது. இது வழக்கமாக வங்கிகள் வசூலிக்கும் வட்டியை விட அதிகம். மிகவும் அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத சூழல் ஏற்படாதபோது இதுபோன்ற மொபைல் ஆப் மூலம் கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.