இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,852க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1,118க்கு விற்பனை செய்யப்படுகிறது.