Published : May 01, 2025, 08:06 AM ISTUpdated : May 01, 2025, 08:19 AM IST
மே 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906 ஆக விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
LPG Cylinder Price: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
25
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம்
எண்ணெய் நிறுவனங்கள்
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
35
கடந்த ஏப்ரல் மாதமும் குறைந்த விலை
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு எரிவாயு சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 43.50 குறைக்கப்பட்டது.
இந்நிலையில், மே1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,921.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.15.50 குறைக்கப்பட்டு ரூ.1906ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
55
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
அதேநேரத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 10 மாதங்களாக ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென விலை ரூ.50 உயர்ந்து ரூ.868.50க்கு விற்பனையானது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இந்த மாதம் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.