Gold Rate
இந்திய ரூபாயின் மதிப்பு நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலானது என்பதாலும், இந்தியர்களுக்கு நகை மீதான பிரியம் அதிகம் என்பதாலும் இந்தியாவில் தங்கத்தின் மவுசு என்றைக்கும் குறைந்ததே இல்லை. குறிப்பாக தங்கத்தின் மீதான மோகம் பெண்களுக்கு அதிகம் என்பதால் நகையின் விலையில் என்னதான் ஏற்றம் கண்டாலும் கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.
மேலும் தங்கம் பெரிய அளவில் ஆபத்து இல்லாத முதலீடு என்பதாலும் நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் கண்டு விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் நகை பிரியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.
gold rate
இந்நிலையில் தங்கத்தின் விலை நேற்றும், இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில் இன்றைய தினம் அதிரடியாக ரூ.720 குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கும், சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.