Gold Rate Today (October 8): ரூ.90 ஆயிரத்தை தாண்டியது 1 சவரன் தங்கம்.! தங்கமே உனக்கு என்னாச்சு?!

Published : Oct 08, 2025, 09:35 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ₹90,400 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது, புவிசார் அரசியல் பதற்றங்கள் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

PREV
13
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. மூன்றாவது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் 90 ஆயிரத்தை தாண்டியதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி குறைய வாய்ப்பே இல்லையா எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

23
மயக்கமே வரவழைத்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 800 ரூபாய் அதிகரித்து 90,400 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

33
விலை ஏற்றத்துக்கு இதுதான் காரணம்.!

அமெரிக்க அரசின் சாத்தியமான ஷட்‌டவுன் (அரசு முடக்கம்) காரணமாக முக்கிய பொருளாதார தரவுகள் தாமதமாகி, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் ஏற்படும் அரசியல் பதற்றங்கள் (geopolitical tensions) தங்கத்தின் தேவையை அதிகரிக்கின்றன.பெட் (அமெரிக்க கடன் வங்கி) போன்றவை வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு (dovish policies), டாலர் மதிப்பு குறைவு, பாண்ட் யீல்டுகள் (bond yields) இறங்குதல் ஆகியவை தங்கத்தை ஈர்க்கின்றன. தீபாவளி, கல்யாணங்கள் போன்ற பண்டிகை தேவை, ரூபாயின் டாலருக்கு எதிரான மதிப்பு குறைவு (rupee depreciation), ETF (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்) முதலீடுகள் அதிகரித்தல், மத்திய வங்கிகள் (RBI உட்பட) தங்கம் வாங்குதல் ஆகியவை தங்கம் விலை உச்ச்துக்கு கொண்டு செல்கின்றன என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories