Gold Rate Today (October 30): காலையிலேயே வந்த சந்தோஷ செய்தி.! துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!

Published : Oct 30, 2025, 10:02 AM IST

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,800 குறைந்துள்ளதால், திருமணத் திட்டமிடும் குடும்பங்களும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
12
தங்கம் வெள்ளி விலை அதிரடி சரிவு

கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை இடைவிடாமல் ஏற்றம் கண்ட நிலையில், தற்போது மூன்றாவது நாளாக தொடர்ந்து சரிவடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்துள்ள குடும்பங்களும் இல்லத்தரசிகளும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பே ஜெட் வேகத்தில் தங்க விலை உயர்ந்து சாதனை படைத்திருந்தது. இதனால் தங்க நகை வாங்க நினைத்தவர்கள் சற்றே தள்ளிப்போட்டிருந்தனர். ஆனால் திடீரென விலை குறைந்ததால் மீண்டும் தங்கக் கடைகளில் வாங்குபவர்கள் கூடிவருகின்றனர்.

22
தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.225 குறைந்து ரூ.11,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ.1,800 குறைந்து ரூ.88,800 என சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களில் தொடர்ந்து விலை குறைந்து வருவதால், சந்தையில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமண சீசன் நெருங்கி வருவதால், தங்கம் வாங்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெள்ளி விலையும் குறைவு கண்டுள்ளது. தற்போது 1 கிராம் வெள்ளி ரூ.165 க்கும், 1 கிலோ பார்வெள்ளி ரூ.1,65,000 க்கும் விற்பனையாகிறது. இது கடந்த நாளை விட கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை சரிவால் சிறு முதலீட்டாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கும், திருமணத் திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கும் ஓர் ஆறுதலாக அமைந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் இந்த விலை நிலையாக இருந்தால், சந்தையில் தங்கம் மீண்டும் மெருகேற்றம் பெறும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories