தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது, இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி (ஜனவரி 09), 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆண் மற்றும் பெண்கள் உட்பட தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் தற்போதை நிலைமையை பார்த்தால் தங்கம் வாங்குவது என்பது கனவாக போயிடும் என்ற சூழல் நிலவி வருகிறது. அதாவது தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழ்மை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை எப்படி உயருகிறது என்றால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
24
நேற்றை தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
34
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 09) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.12,800ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,909ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 111,272ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. கிராம் ரூ.4 குறைந்து ரூ.268க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.268,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.