Gold Rate Today (ஜனவரி 06): நகை வாங்குபவர்களுக்கு ஷாக்! குறையும்னு நினைச்சா… உயர்ந்த தங்கம் விலை! காரணம் இதுதான்.!

Published : Jan 06, 2026, 09:40 AM IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது, இது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமண சீசன், சர்வதேச சந்தை நிலவரங்கள் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படும் நிலையில், வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

PREV
15
திட்டமா போடுறீங்க திட்டம்.!

சென்னையில் நகை வாங்க தங்க விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு இன்று பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. குறையும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்து, ஆபரணத் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கும் திட்டத்தை போட்டிருந்த பலரும் சற்று தயக்கம் அடைந்துள்ளனர்.

25
இன்னைக்கு ரேட் இதுதான்.!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.12,830 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,02,640 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களில் தங்க விலை ரூ.1 லட்சம் எல்லையை கடந்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் வலுவான ஏற்றம் பதிவாகியுள்ளது.

35
அப்படியா சங்கதி.! இது தெரியாம போச்சே.!

திருமண சீசன் தொடங்கியுள்ளதால், நகைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதும் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதற்கு கூடுதலாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்ததும், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் இந்திய சந்தையில் தங்க விலையை நேரடியாக பாதித்துள்ளன. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்க்கும் முதலீட்டாளர்களின் ஆர்வமும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

45
வெள்ளி விலையும் ஷாக் அடிக்குது.!

அதே நேரத்தில், வெள்ளி விலையும் உயர்வைக் கண்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.271 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ பார்வெள்ளியின் விலை ரூ.2,71,000 ஆக உயர்ந்துள்ளது. தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரிப்பதே வெள்ளி விலை உயர்வுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

55
பாதுகாப்பான முதலீடாகவே தொடரும்.!

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நகை வாங்க நினைத்தவர்கள் மீண்டும் கணக்குப் போட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், நீண்டகால முதலீட்டு நோக்கில் பார்க்கும்போது, தங்கம் இன்னும் பாதுகாப்பான முதலீடாகவே தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வருங்கால நாட்களில் சர்வதேச பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories