சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 12,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 1,03,120 ரூபாய் என்ற பிரம்மாண்ட விலையை எட்டியுள்ளது.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 9 ரூபாய் உயர்ந்து 254 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 9,000 ரூபாய் உயர்ந்து 2,54,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.