Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

Published : Dec 09, 2025, 09:54 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது, இது திருமணத்திற்காக நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை சரிந்த நிலையில், வெள்ளி விலை சிறிதளவு உயர்ந்துள்ளது.

PREV
12
நிம்மதி தந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக உயர்வில் இருந்த தங்கம் தற்போது சற்று சரிந்துள்ளதால், குறிப்பாக திருமணத்திற்கான நகை வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பங்களுக்கு இது உண்மையாகவே இன்ப அதிர்ச்சி எனலாம். நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடிவருகிறது. தங்க விலை குறைவு காரணமாக பலர் முன்கூட்டியே நகை வாங்கி வைக்கும் ஆசையில் கடைகளுக்கு சென்று வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய விலை நிலவரப்படி, சென்னை சந்தையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் குறைந்து ரூ.96,000 ஆகியுள்ளது. தங்கத்தின் இந்தக் குறைவு இந்திய உள்ளூர் சந்தை காரணமாக மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை நோக்கி கவனம் திருப்பியதுதான் முக்கிய காரணம் என நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். உலகளாவிய சந்தை மாற்றங்கள் தங்க விலைக்கு நேரடி தாக்கம் ஏற்படுத்துவது இங்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

22
வெள்ளி விலையை தெரிஞ்சுக்கோங்க

ஒருபுறம் தங்கம் விலை குறைந்ததால் மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ள நிலையில், மறுபுறம் வெள்ளி விலை சற்று உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.199 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் 1 கிலோ வெள்ளி விலை 1,99,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் வீட்டுப் பயன்பாடு, தொழில் மற்றும் மத நம்பிக்கைகளில் வெள்ளி பயன்பாடு அதிகம் இருப்பதால் விலை உயர்வு சிறு அழுத்தத்தை ஏற்படுத்தும் என வணிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், தங்கம் விலை குறைந்து சந்தையில் உயிரூட்டியுள்ள நிலையில், வெள்ளி விலை உயர்வு சிறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், நகை சந்தை மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. தற்போது விலை சாதகமாக இருப்பதால் நகை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என சொல்லலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories