gold rate today
ஒரு சவரன் ஒரு லட்சம்.?
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை நகைக்கடைகளில் வாங்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலையானது ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Gold rate
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தற்போதே வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்குகிறார்கள். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தங்கத்தில் முதலீடும் செய்வதால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை அதிகளவு மக்கள் வாக்குகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் அதிகளவு தங்கம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்.
gold rate today chennai
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடரந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாக மாறியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (10.01.24) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7285க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை என்ன.?
நேற்று மீண்டும் தங்கம் விலை (11.01.24) உயர்ந்தது. அதன் படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7315க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரும் நாட்கள் விஷேச நாட்களாக இருப்பதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து 60ஆயிரம் ரூபாயை வரும் வாரத்தில் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.