Published : Feb 18, 2025, 09:41 AM ISTUpdated : Feb 18, 2025, 09:45 AM IST
2025ஆம் ஆண்டு தங்கம் விலை எதிர்பாராத விதமாக ஜெட் வேகத்தில் உயர்ந்து, சவரனுக்கு ரூ.64,000ஐத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், வர்த்தகப் போர் அச்சம், மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற காரணிகள் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகின்றன.
இன்று தங்க நகைகள் வாங்க நல்ல வாய்ப்பா.? ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்து தெரியுமா.?
தங்கம் விலையானது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும், ஆனால் இந்த 2025ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 61 ஆயிரம், 62 ஆயிரம் என உயர்ந்த தங்கம் விலை பிப்ரவரி 11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
25
ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
நடுத்தர வர்க்க மக்கள் தங்களின் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக தங்கம் வாங்க திட்டமிட்ட நிலையில் தங்கம் விலையானது தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். மேலும் தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச மார்க்கெட் விலை நிலவரப்படி தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது நாள்தோறும் உச்சத்தை சந்திக்கிறது.
35
தங்கம் விலை
இதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு மற்ற நாடுகளில் மீது அவர் விதிக்கும் வரி விதிப்பு கொள்கையால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பாலான நாட்டு மக்கள் தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
45
நகைப்பிரியர்களுக்கு ஷாக்
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை அடுத்த ஒரு நாளில் நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாள் நேற்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
55
இன்றைய தங்கம் விலை என்ன.?
இன்று தங்கத்தின் விலையானது இன்றும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 63,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.